For Daily Alerts
Just In
சினிமாவில் புகைக்குத் தடை: கருத்தரங்கில் கோரிக்கை
சென்னை:
தமிழ் சினிமாவில் சிகரெட் புகைப்பதை காட்டுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சென்னையில் நடந்த புற்றுநோய்எதிர்ப்புக் கருத்தரங்கில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருத்தரங்கில் நடிகர் பாலா உள்ளிட்ட பல திரையுலகினர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசியவர்கள் பலரும், தமிழ் சினிமாவில் சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகள் அதிக அளவில்இடம்பெறுகின்றன. ஹீரோக்கள் ஸ்டைலாக புகை பிடிப்பது போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெறுவதால்,அவர்களின் ரசிகர்களும் புகை பிடிக்கத் தூண்டப்படுகிறார்கள்.
அத்தோடு சிறுவர்களும் சிகரெட் பிடிக்க தூண்டப்படுகிறார்கள். எனவே சினிமாவில் புகை பிடிக்கும் காட்சிகளைதவிர்க்குமாறு கேட்டுக் கொண்டனர்.
சிகரெட்டின் கொடுமையை விளக்கும் விதமான நூதன ஆடை, அலங்கார போட்டிகளும் நடந்தன.


