For Daily Alerts
Just In
பஞ்சாலை எரிந்து சாம்பல்: ரூ. 10 கோடி பஞ்சு மூட்டைகள் தீயில் நாசம்
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பஞ்சாலையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் பல கோடி மதிப்புள்ளபஞ்சு மூட்டைகள் எரிந்து சாம்பலாயின.
இன்று அதிகாலை இங்குள்ள ஒரு கிட்டங்கியில் தீ பிடித்துக் கொண்டது. மிக வேகமாக வீசிய காற்றால் தீஅடுத்தடுத்த கிட்டங்கிகளுக்கும் பரவியது. இசில் 5 கிட்டங்களிலும் இருந்த 20,000 பஞ்சு மூட்டைகளும் எரிந்துசாம்பலாயின.
இவற்றின் மதிப்பு ரூ. 10 கோடியைத் தாண்டும் என்று தெரிகிறது.
சுமார் 10 மணி நேரம் போராடித் தான் தீயணைப்புப் படை வீரர்களால் தீயை அணைக்க முடிந்தது.


