நண்பர்களுக்காக தா.கியை கொன்றேன்: சுலைமான் சேட் வாக்குமூலம்
மதுரை:
திமுகவைச் சேர்ந்த எஸ்.ஆர்.கோபியும், முபாரக் மந்திரியும் எனக்கு நண்பர்கள். அவர்கள் கேட்டுக் கொண்டதால்தா.கிருட்டிணனை வெட்டிக் கொன்றேன் என இப்ராகிம் சுலைமான் சேட் போலீசில் வாக்குமூலம்அளித்துள்ளதாகத் தெரிகிறது.
முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்த இப்ராகிம்சுலைமான் சேட்டிடம் தற்போது தீவிர விசாரணை நடந்து வருகிறது.
விசாரணையின்போது போலீஸாடம் நான் தான் தா.கிருட்டிணனை வெட்டிக் கொன்றேன் என சுலைமான் சேட்ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
போலீஸாரிடம் சேட் கூறியுள்ளதாவது:
நானும், முபாரக் மந்திரியும், எஸ்.ஆர்.கோபியும் நல்ல நண்பர்கள். எனக்கு அவர்கள் இருவரும் பல வகைகளிலும்உதவியுள்ளனர்.
இந் நிலையில் கடந்த மே மாதம் 14ம் தேதி இருவரும் என்னை டவுன்ஹால் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜுக்குஅழைத்துச் சென்றனர். அங்கு வைத்து, தா.கியைக் கொலை செய்ய வேண்டும் என்று கூறினர்.
இருவரும் கேட்டுக் கொண்டதால் அதைத் தட்ட முடியவில்லை. சரி என்று ஒத்துக் கொண்டேன்.
பின்னர் தா.கியின் வீட்டை அடையாளம் பார்ப்பதற்காக மன்னனின் காரில், நானும், முபாரக் மந்திரியும்கே.கே.நகர் சென்றோம். தா.கிருட்டிணனின் வீட்டை அடையாளம் பார்த்துக் கொண்டேன்.
அடுத்த நாள் அதிகாலை 4 மணியளவில் நானும், முபாரக்கும் மோட்டார் சைக்கிளில் தா.கியின் வீட்டிற்குச்சென்றோம்.
அப்போது அவர் வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அவருக்கு அருகே சென்று மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, கையில் வைத்திருந்த கத்தியால், தா.கியை பலமுறை குத்தினேன். அவர் கதறிக் கொண்டு சரிந்து விழுந்தார்.பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றோம்.
இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த நான் எனது உறவினர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திநெருக்கடி தரத் தொடங்கியதால் சென்னை நீதிமன்றத்தில் சரணடைந்தேன் என்று சேட் வாக்குமூலம்அளித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


