தா.கி. குடும்பத்தினருடன் ஜெயலலிதா சந்திப்பு
சென்னை:
கொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணனின் குடும்பத்தினர் இன்று முதல்வர்ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினர்.
மதுரையில் கொலை செய்யப்பட்ட தா.கிருட்டிணனின் குடும்பத்தினர், தங்களுக்கும் கொலை மிரட்டல்கள்வருவதாக கூறியிருந்தனர். இதைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து கொம்புக்கரனேந்தலில் உள்ள தா.கி.யின் வீட்டுக்கு சப் இன்ஸ்பெக்டர் தலைமையிலானபோலீஸ் படை மூலம் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், முதல்வரைச் சந்திக்க அனுமதி கோரி தா.கி. குடுபத்தினர் நேரம் கேட்டிருந்தனர். அதை ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா இன்று காலை அவர்களை சந்திக்க நேரம் ஒதுக்கினார்.
தா.கியின் மமனைவி பத்மாவதி, மகன் தொல்காப்பியன், மகள் தேமா, தம்பி ராமையா, அவரது மகன்நெடுஞ்செழியன் ஆகியோர் நேற்று சிவகங்கையிலிருந்து கார் மூலம் சென்னை கிளம்பினர்.
வரும் வழியில் அவர்களுக்கு அந்தந்த மாவட்ட போலீஸார் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.நேற்றிரவு உறவினரின் வீட்டில் தங்கினர். இன்று காலை 11 மணிக்கு பத்மாவதி தவிர்த்த மற்ற நால்வரும்சென்னை தலைமைச் செயகலம் சென்று ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர்.
முதல்வரைக் கண்ட தா.கியின் மகள் தேமா கண்கலங்கினார். அவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களையும்,ஆறுதலும் கூறிய ஜெயலலிதா போலீஸ் பாதுகாப்பு தொடரும் என்று உறுதியளித்தார்.
இதையடுத்து அவர்கள் ஜெயலலிதாவிடம் ஒரு மனுவை அளித்தனர். அதில், தா.கிருட்டிணன் கொலை வழக்குவிசாரணையைத் துரிதப்படுத்த வேண்டும் எனவும் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டைனக்கு உட்படுத்தவேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டிருந்தது.
அந்த மனுவை வாங்கிக் கொண்ட ஜெயலலிதா, குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது. வழக்குவிசாரணையை போலீசார் மிக வேகமாக நடத்தி வருகின்றனர் என்றார்.
பின்னர் அவர்களுக்கு வேறு ஏதும் உதவிகள் தேவையா என்று ஜெயலலிதா கேட்டார். அவர்கள் போலீஸ்பாதுகாப்பு தான் தேவை என்றனர். இதையடுத்து பாதுகாப்பு தொடரும் என ஜெயலலிதா உறுதியளித்தார்.
பின்னர் வெளியே வந்த ராமையா செய்தியாளர்களிடம் பேசுகையில், அழகிரிதான் குற்றவாளிஎன்று தெரிந்தும் கூட அவரைக் காப்பாற்ற கருணாநிதி முயலுகிறார் என்று குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதாவைச் சந்தித்த தா.கியின் தம்பி ராமையாவும் அவரது மகன் நெடுஞ்செழியனும் போலீசாரிடம்அளித்துள்ள வாக்குமூலத்தில் இந்தக் கொலையைச் செய்யச் சொன்னது அழகிரி தான் என்று புகார் கூறியுள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது. இதை நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளனர்.
மேலும் திமுக தலைவர் கருணாநிதியைக் கடுமையாக விமர்சித்து அவருக்கே கடிதம் எழுதியுள்ளார் ராமைய்யாஎன்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மலேசிய தொழிலதிபர் உள்பட சிலருக்குச் சொந்தமான ரூ. 18 கோடிக்கும் அதிகமான சொத்துக்கள்தா.கி. குடும்பத்தினரிடம் பினாமி பெயரில் சிக்கியுள்ளதாகவும், அதைத் திருப்பித் தர மறுத்ததால் அந்தசொத்துக்களின் உரிமையாளர்களுக்கும் தா.கி. குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சனை மூண்டதாகவும்செய்திகள் கசிகின்றன.
இந்த பினாமி சொத்துக்களை தா.கி. சார்பில் கண்காணித்து வந்தது ராமைய்யா தான் என்றும் கூறப்படுகிறது.
இந்தத் தகவல்களை இன்டெலிஜென்ஸ் பீரோ, மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளது.


