ஸ்டாலினுக்கு லண்டன் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்!
சென்னை:
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஸ்டாலினுக்கு லண்டன் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கவுள்ளது.
ஐரீஷ் பன்னாட்டுப் பல்கலைக்கழகம் இந்த கெளரவ பட்டத்தை வழங்க உள்ளதாக திமுக தலைமைக் கழகம்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சென்னை மாநகரில் நேரடியாகத் தேர்தல் நடத்தப்பட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல் மேயர்என்பதற்காகவும், மேயராக இருந்த காலத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டதற்காகவும், எழில்மிகு சென்னை திட்டம்,நகரில் பாலங்கள், மின் விளக்குகள் அமைப்பதில் சாதனை புரிந்ததற்காகவும், சிங்காரச் சென்னை திட்டத்தின்மூலம் நகரின் சுற்றுச் சூழல் பாதுகாப்புக்கு பாடுபட்டதற்காகவும் இந்தப் பட்டம் வழங்கப்படுவதாக ஐரீஷ்பல்கலைக்கழகம் கூறியுள்ளது.
இம் மாதம் 27ம் தேதி இதற்கான பட்டமளிப்பு விழா லண்டனில் நடக்கிறது. ஸ்டாலின் நேரில் லண்டன் சென்றுஇந்தப் பட்டத்தைப் பெறுவாராம்.


