For Daily Alerts
Just In
பாப்பாபட்டி: வேட்பு மனு தாக்கல் இன்றுடன் முடிகிறது
மதுரை:
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம், கொட்டகச்சியேந்தல் ஆகிய நான்கு தலித் பஞ்சாயத்துக்களுக்கும்நடைபெறவுள்ள தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.
தலித்களை தலைவர்களாக ஏற்க தேவர் சமூகத்தினர் காட்டி வரும் எதிர்ப்பால் நீண்ட காலமாக தேர்தல் நடக்காமல்உள்ள இந்த தலித் பஞ்சாயத்துகளுக்கும் அக்டோபர் 9ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள. மனு தாக்கல் செய்தாலே கொல்லப்படலாம் என்றநிலைமை நிலவுகிறது. இதனால் தலித்கள் போட்டியிட மறுத்து வருகின்றனர்.
பாப்பாபட்டியில் மட்டுமே 2 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அவர்களும் தலைமறைவாக, பதுங்கி வாழவேண்டிய நிலையில் உள்ளனர். மற்ற தலித் பஞ்சாயத்துக்களில் யாரும் இதுவரை வேட்பு மனுத் தாக்கல்செய்யவில்லை.


