For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அத்வானி-ஜெ கூட்டணியை முறியடிப்போம்- கருணாநிதி ஆவேசம்

By Staff
Google Oneindia Tamil News

விருதுநகர்:

திமுக தலைமையிலான கூட்டணி அத்வானி- ஜெயலலிதா சந்தர்ப்பவாத கூட்டணியை எதிர்த்துப் போராடும் எனகருணாநிதி கூறினார். உண்மையில் வாஜ்பாய்-ஜெயலலிதா இடையே கூட்டணியே இல்லை என்றும் அவர்கூறினார்.

விருதுநகரில் நடந்த திமுக தென் மண்டல மாநாட்டில் சுமார் 10 லட்சம் தொண்டர்களின் மத்தியில் திமுக தலைவர்கருணாநிதி நிறைவுரையாற்றினார். இரவு 9.45 மணிக்குப் பேச ஆரம்பித்த அவர் 10.45 மணிக்கு முடித்தார். சிலகாலமாக தனது பேச்சில் ஆவேசத்தைக் குறைத்திருந்த கருணாநிதியின் இந்தப் பேச்சில் கடும் கனல் தெறித்தது.

அவரது ஆவேசப் பேச்சின் விவரம்:

சாத்தூர் ராமச்சந்திரனின் உன்னத முயற்சியால் மிகப் பெரிய மாநாடு, மிகப் பெரும் எழுச்சியுடன் நடந்துள்ளது.மாநாடு மாபெரும் வெற்றியடைந்துள்ளது என்பதற்கு இங்கே கூடியிருக்கும் லட்சக்கணக்கான தலைகளே சாட்சி.

ஆனால், இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசாரே இல்லை. நானும் பிற கட்சித் தலைவர்களும்மிகப் பெரிய சிரமத்துக்குப் பின்னர் தான் மாநாட்டுக்கே வர முடிந்தது. அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல்.போக்குவரத்தை சீர் செய்ய வேண்டிய போலீசார் அது எங்கள் வேலை இல்லை என்று ஒதுங்கிக்கொண்டுவிட்டார்கள்.

மாநாடு தொடங்கும் முன் இங்கு நியாயமாக செயல்பட்ட ஒரு அதிகாரியையும் மாற்றிவிட்டார்கள். போலீசாருக்குபல நன்மைகளைச் செய்த கட்சி திமுக. ஆனால், பாதுகாப்பு தராமல் ஒதுங்கிக் கொண்ட அந்த போலீசாரும்அதிகாரிகளும் மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அது குறித்து யோசித்துப் பார்க்க வேண்டும்.

திமுக தொண்டர்களே இங்கே போக்குவரத்தையும் கட்டுப்படுத்தியதால் நிலைமையை சமாளித்திருக்கிறோம்.இவ்வளவு பெரிய கூட்டத்துக்கு 4,5 போலீசார் பாதுகாப்பு வந்திருக்கிறீர்கள். பரவாயில்லை, தொண்டரணியின்பாதுகாப்பை வைத்தே நாங்கள் எவ்வளவு பெரிய மாநாட்டையும் நடத்திக் காட்டுவோம். நடத்திக்கொண்டிருக்கிறோம்.

போலீசாருக்கு ஒரு அறிவுரை, மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு அதிமுக கட்சிக்காரர்கள்போல செயல்படாதீர்கள். தேர்தலின்போதும் இதே போல நீங்கள் செயல்படுவீர்களேயானால், உங்கள்வேலையையும் எங்கள் தொண்டர்கள் பார்க்கும் நிலைமை வந்துவிடும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.

இங்கே என்னுடன் மேடையில் அமர்ந்திருக்கும் கூட்டணிக் கட்சியினர் கடந்த முறை அதிமுகவுடன் கூட்டணிசேர்ந்தார்கள். அதை ஸ்டாலின் தவறு என்று சுட்டிக் காட்டினார். அவர்கள் மட்டும் தவறு செய்யவில்லை. நானும்,திமுகவும தவறு செய்தோம்.

பிற தலைவர்கள் ஜெயலலிதாவை நம்பிக் கெட்டார்கள். நான் வாஜ்பாயை நம்பிக் கெட்டுப் போனேம்.

வாஜ்பாயை ஆதரிக்காத காலத்திலும் கூட அவரை நான் நல்ல மனிதர், தவறான கட்சியில் இருக்கிறார் என்று தான்கூறியிருக்கிறேன். இப்போது அவர் போகிற போக்கைப் பார்த்தால் நல்ல மனிதரை அந்தக் கட்சி தவறானமனிதராக்கிவிட்டதாக நினைக்கத் தோன்றுகிறது.

திமுகவுக்கும் பா.ஜ.கவுக்கும் இடையே பிசிறு தட்ட முக்கியக் காரணங்களில் ஒன்று வைகோவுக்கு நேர்ந்த பொடாசிறைவாசக் கொடுமை. அயோத்திப் பிரச்சனையிலும் வாக்குறுதியை மீறி நடக்க முயன்றார்கள்.

இப்போது பா.ஜ.கவுக்கு எதிராக நாங்கள் அமைத்திருக்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி,வாஜ்பாய்-ஜெயலலிதா கூட்டணியை எதிர்க்கும் என்று இங்கு பேசிய தம்பி வாசன் கூறினார். அது தவறு.வாஜ்பாய்க்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே கூட்டணியே இல்லை.

உண்மையில் அது அத்வானி-ஜெயலலிதா கூட்டணி. பா.ஜ.க. சார்பில் யார் யாரோ தூது வந்தும் ஜெயலலிதாஅவர்களுடன் பேசக் கூட இல்லை. கூட்டணி ஏற்படவில்லை. இந் நிலையில் அத்வானி தான் போனில் பேசிஜெயலலிதாவுடன் கூட்டணியை இறுதி செய்தார்.

தொகுதிப் பங்கீடு பிரச்சனை வந்தபோதும் ஜெயலலிதாவுடன் பேசியது அத்வானி தான். அதன் பின்னர் தன்சார்பில் சுஷ்மா சுவராஜை அனுப்பி, ஜெயலலிதாவை அவர் ஆரத் தழுவி கூட்டணியை உறுதிப்படுத்தினார்அத்வானி.

எனவே வாஜ்பாய்-ஜெயலலிதா கூட்டணி என்பது வெறும் பெயரளவுக்குத் தான். நாம் போராடப் போவதுஅத்வானி-ஜெயலலிதா கூட்டணியைத் தான். நம்மோடு கூட்டணி வைத்திருந்தபோதே சுரங்கப் பாதை அமைத்துஜெயலலிதாவுடன் கூட்டணியை உருவாக்கிவிட்டார்கள் பா.ஜ.கவினர்.

மாறன் மருத்துவமனையில் இருந்தபோது வாஜ்பாய் 2 முறை வந்து பார்த்தார். ஆனால், 3 முறை சென்னை வந்தஅத்வானி ஒரு முறை கூட பார்க்க வரவில்லை. தொலைபேசியல் கூட உடல் நிலை விசாரிக்க அவருக்கு மனம்வரவில்லை. மாறனைப் பார்க்க அத்வானி வருவதை ஜெயலலிதா எப்படி அனுமதிப்பார்? என்றார் கருணாநிதி.

ஜெயலலிதாவுடன் கூட்டணி உருவாக இடைஞ்சல் வரும் என்பதால் சக மந்திரி செத்ததற்குக் கூட மரியாதைசெலுத்தக் கூட மனம் வரவில்லை அத்வானிக்கு. இப்படிப்பட்ட கலாச்சாரம் கொண்டவர்களுடன் சேர்ந்ததால்நாமும் தவறு செய்துவிட்டோம்.

நம் கலாச்சாரம், திராவிட நாகரீகத்தை காக்க வேண்டிய நிலையில் இன்று நாம் களத்தில் இருக்கிறோம். நமதுகூட்டணியால் தமிழக அரசின் பிடிவாதம் தளர்ந்திருக்கிறது. வேலை நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்குமீண்டும் வேலை தரச் சொன்ன உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்துக்கே பயப்படாத ஜெயலலிதா இப்போது 999பேருக்கும் மீண்டும் வேலை தந்துள்ளார்.

மக்கள் மன்றத்தில் ஜெயலலிதாவை சந்திக்கப் போகிறோம். ஜெயலலிதாவின் கடந்த கால வரலாற்றைஅறிந்தவர்களுக்கு ஒன்று புரியும். நான் அவரது வாழ்க்கை வரலாற்றைக் கூறவில்லை. அவரது அரசியல் வரலாற்றுவண்டவாளத்தைக் கூறுகிறேன்.

ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் போட்டியிட்டபோது ரேசன் அரிசி விலையை ரூ. 3 ஆகக் குறைத்த ஜெயலலிதா,வென்ற பிறகு அதை ரூ. 6 ஆக்கினார். ஜெயலலிதாவின் வாக்குறுதிகளை நம்பினால் ஏமாந்து போவீர்கள் என்றுமக்களை எச்சரிக்கிறேன். இப்போது நாள்தோறும் அவர் அறிவித்து வரும் சலுகைகள் எல்லாம் தேர்தல் முடிந்தபின்ரத்தாகிவிடும்.

நமது கவர்னர் அதுக்கும் மேல். அமைச்சர்களை நீக்க, மாற்ற கவர்னரை நேரில் போய் முதல்வர் சந்திப்பது மரபு.ஆனால், இந்த கவர்னருக்கு ஜெயலலிதா ஒரு பேக்ஸ் அனுப்பினாலே அதை ஏற்று கையெழுத்துப் போடுகிறார்.இந்த ஆமாம் போடும் கவர்னரும் அந்தப் பதவியும் தேவையே இல்லை. இவரைப் போன்ற ஒரு கவர்னர்இருப்பது ஆட்டுக்கு தாடி இருப்பது மாதிரி. அதனால் எந்தப் பயனும் கிடையாது.

அத்வானி-ஜெயலலிதா கூட்டணிக்கு முக்கிய காரணகர்த்தாக்களில் ஒருவர் காஞ்சி சங்கராச்சாரியார்.

தமிழகத்தில் நாம் அமைத்திருக்கும் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி ஒரு புயல் சின்னம். அது புயலாய் மாறிக்கொண்டிருக்க்கிறது. தேர்தலின்போது கரையைக் கடக்கும். அத்வானி-ஜெயலலிதா கூட்டணியை, அதிமுகவின்அநியாய, அக்கிரமங்களை அந்தப் புயல் அடித்துத் தூக்கி எறியும் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X