For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயலட்சுமியிடம் இன்றும் சிபிஐ விசாரணை

By Super
Google Oneindia Tamil News

மதுரை:

Jayalakshmi

சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் ஜெயலட்சுமி
ஜெயலட்சுமியிடம் சிபிஐ அதிகாரிகள் இன்றும் தீவிர விசாரணை நடத்தினர்.

கூடுதல் எஸ்.பி. சிவாஜி தலைமையிலான 5 பேர் கொண்ட குழு நேற்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைசுமார் ஒன்பது மணி நேரம் விசாரணை நடத்தினர். மதுரை ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள சிபிஐஅலுவலகத்தில் வைத்து ஜெயலட்சுமி விசாக்கப்பட்டார். அப்போது பல கேள்விகளுக்கு அவரால் சரியான பதில்சொல்ல முடியவில்லை என்று தெரிகிறது.

இந் நிலையில் இன்று காலை மீண்டும் ஜெயலட்சுமியை தங்களது அலுவலகத்துக்கு வரவழைத்து சிபிஐஅதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலை 10 மணி முதல் இந்த விசாரணை நடந்து வருகிறது. நேற்று ஜெயலட்சுமியுடன் அவரது வழக்கறிஞர்கள்உடன் இருந்தனர். ஆனால் இன்றைய விசாரணையின்போது வழக்கறிஞர்கள் உடன் இருக்கஅனுமதிக்கப்படவில்லை.

மேலும் 2 எஸ்கள் சஸ்பெண்ட்:

இதற்கிடையே, ஜெயலட்சுமி வழக்கில் தொடர்புடைய நெல்லை ஆயுதப்படை சப் இன்ஸ்பெக்டர் விக்னேஸ்வரன்,கமுதி சப் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் ஆகியோரை இன்று தமிழக அரசு தாற்காலிக பணி நீக்கம் செய்துள்ளது.

இந்த விக்னேஸ்வரன் டி.எஸ்.பி. ராஜசேகரின் கீழ் பணியாற்றியிருக்கிறார். ஜெயலட்சுமியுடன் ராஜசேகர்வைத்திருந்த தொடர்பு குறித்து உயர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் தராததால் அவர் சஸ்பெண்டுசெய்யப்பட்டிருக்கிறார்.

கமுதி மதுவிலக்கு சப் இன்ஸ்பெக்டரான சண்முகவேல், நெல்லையில் ஜெயலட்சுமி மீது 2002ம் ஆண்டில் விபச்சாரவழக்குப் பதிவு செய்யப்பட்டபோது அங்கு சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர்.

இந்த வழக்கு குறித்த முறையான தகவல்களை கொடுக்கத் தவறியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.இதையடுத்து சண்முகவேல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இவர்கள் சஸ்பெண்ட் ஆனதைத் தொடர்ந்து ஜெயலட்சுமி விவகாரத்தில் சஸ்பெண்ட் ஆன போலீஸ் அதிகாரிகள்எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

ஜெயலட்சுமி மீது மோசடி புகார்:

இந் நிலையில், போலீஸார் மற்றும் பொதுமக்களிடம் ஜெயலட்சுமி ரூ. 1கோடி வரை மோசடி செய்துள்ளதாகஇன்ஸ்பெக்டர் இளங்கோவனின் வழக்கறிஞர் காந்தி புகார் தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், கோவை, ஈரோடு, பெருந்துரை, கோவில்பட்டி உள்ளிட்ட பல ஊர்களில் மல்டி லெவல்மார்க்கெட்டிங் என்ற பெயரில் ரூ. 75 லட்சம் வரை பொதுமக்களிடம் பணம் வசூலித்துள்ளார் ஜெயலட்சுமி.இதேபோல, காவல்துறையினரிடம் ரூ. 26 லட்சம் வரை மோசடி செய்துள்ளார்.

இதேபோல மினரல் வாட்டர் தயாரிப்பு தொழிலில் ரூ. 2 லட்சம் வரை ஜெயலட்சுமி பணம் முதலீடு செய்துள்ளார்.இவை குறித்தும் சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என்றார் காந்தி. இளங்கோவன் இப்போது சிறையில்இருப்பது குறிப்பிடத்தக்கது.

Jayalakshmi and Sathyamoorthi

ஜெயலட்சுமி வெளியில் சொல்லாமல் மறைத்த வழக்கறிஞர் சத்தியமூர்த்தியுடன். இருவரும் திருமணம் செய்துகொண்டு சில காலம் வாழ்ந்ததாகவும் தெரிகிறது.

இதற்கிடையே, சப் இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன், நகைக் கடை அதிபர் முருகவேல், அவரது கார்டிரைவர் அழகர் ஆகியோரது சிறைக் காவல் அக்டோபர் 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கானஉத்தரவை சிவகாசி நீதித்துறை நீதிமன்ற நீதிபதி ஆபிரகாம் லிங்கன் பிறப்பித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X