For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை: ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் எண்ணம் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா இன்றுகூறினார்.

அதிமுக உருவாக்கப்பட்டதன் 33வது ஆண்டு விழாவையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகதலைமைக் கழக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

பின்னர் அங்கு கூடியிருந்தோருக்கு இனிப்புகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து அதிமுக ஆண்டு விழா மலரைஅவர் வெளியிட பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார். பின்னர் 44அதிகவினரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000 குடும்ப நல நிதியாக வழங்கினார்.

அதிகவினரின் குழந்தைகளுக்கு இலவச சைக்கிள், அயர்ன்பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளையும்ஜெயலலிதா வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக வருகிற 19ம் தேதி (நாளை மறுநாள்) சம்பந்தப்பட்ட துறைஅமைச்சர்கள், அதிகாரிகள் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தவுள்ளனர். அதற்கு அடுத்த நாள் 20ம்தேதி நான் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளேன்.

சென்னை நகரில் கடந்த 3 ஆண்டுகளாக மழை இல்லை, கடும் வறட்சி நிலவியது. இதனால் குடிக்கக் கூட நீர்இல்லாமல் சென்னை மக்கள் நகரை விட்டு காலி செய்து விட்டுப் போக வேண்டிய அவல நிலை உருவாகும்வாய்ப்பு இருந்தது.

கிருஷ்ணா நதி நீரை மட்டுமே நம்பி இருக்க முடியாது. மழையும் பெய்யவில்லை. இந்த நிலையில் ஒரு அரசால்என்ன செய்ய முடியும். எனவேதான் மிகவும் துணிச்சலோடு நான் புதிய வீராணம் திட்டத்தை தொடங்கி முடித்தேன்.

இப்போது புதிய வீராணம் திட்டத்தின் காரணமாக சென்னை நகரில் தினசரி குடிநீர் விநியோகம் செய்யக் கூடியஅளவுக்கு நிலைமை மேம்பட்டுள்ளது. இந்த துணிச்சலான செயலை செய்தற்காக நல்ல மனம் படைத்தவர்கள் இந்தஅரசை பாராட்ட வேண்டும், என்னைப் பாராட்ட வேண்டும்.

வீராணம் ஏரியில் நீர் இருந்தால் விவசாயத்திற்குப் போக மீதமுள்ள நீரை சென்னைக்குக் குழாய்கள் மூலம்கொண்டு வருவோம். வீராணம் ஏரியில் நீர் குறைந்தால் கொள்ளிடத்திலிருந்து ஏரிக்கு தண்ணீர் பாய்ச்சிசென்னைக்குக் கொண்டு வருவோம். கொள்ளிடத்திலும் தண்ணீர் வற்றினால், நெய்வேலி, பண்ருட்டி பகுதிகளில்போடப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து வருவோம். எப்படியும் சென்னை நகருக்குதொடர்ந்து தண்ணீர் கொடுத்துக் கொண்டே இருப்பேன்.

தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தக் கூடிய சூழல் இப்போது இல்லை. அதற்கான அவசியம்இல்லை. சட்டசபை ஆயுள்காலம் முடிவடைந்த பின்னரே தேர்தல் நடத்தப்படும்.

ஆந்திர மாநிலத்தில் சிறு சிறு நக்சலைட் குழுக்கள் ஒன்று சேர்ந்திருப்பது நாட்டின் ஒற்றுமைக்கும்,ஒருமைப்பாட்டுக்கும் ஆபத்தானது. ஆந்திர அரசு நக்சலைட்டுகளுடன் பேச்சு நடத்துவதும் நல்லதல்ல.

மகாராஷ்டிர மாநலத்தில் காங்கிரஸ் கூட்டணிக்குக் கிடைத்திருக்கும் வெற்றிக்கு முக்கிய காரணம் சரத்பவாரும்,அவரது தேசியவாத காங்கிரஸ் கட்சியும்தான். காங்கிரஸ் கட்சிக்கு இந்த வெற்றியில் உரிமை இல்லை.

தமிழகத்தைச் சேர்ந்த 12 மத்திய அமைச்சர்கள் பேசத்தான் செய்கிறார்களே ஒழிய மாநிலத்தின் நலனுக்காகஎதையும் செய்யவில்லை. என்னைச் சந்தித்து பேசுவது குறித்து கூட அவர்கள் கவலைப்படவில்லை. அவர்கள்மாநிலத்திற்கு ஏதேனும் நல்லது செய்ய விரும்பினால், அவர்களுக்கு எனது அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்.

மத்தியில் பாஜக ஆட்சி அமையாமல் போனதற்கு காரணம் தமிழகத்தில் ஏற்பட்ட தோல்விதான் என்று முன்னாள்துணைப் பிரதமர் அத்வானி கூறியிருக்கிறார். நடந்ததைப் பற்றி பேச நான் விரும்பவில்லை. பாஜகவுடனானஅதிமுக கூட்டணியை புதுப்பிப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்று கூறினார்.

ஜெ. போட்ட டைம் டேபிள்:

இதற்கிடையே அதிமுக நிர்வாகிகள் தினசரி தலைமைக் கழக அலுவலகத்திற்கு வந்து தொண்டர்களின் குறைகள்,கோரிக்கைகளை கவனிக்க வேண்டும் என்று டைம் டேபிள் போட்டுக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.

அதிமுக தலைமைக் கழகத்தில் முக்கிய நிர்வாகிகள் யாரும் சரியாக வருவதில்லை, தொண்டர்களின் கருத்தைக்கேட்க ஒருவரும் இருப்பதில்லை என்று ஜெயலலிதாவுக்கு புகார் மேல் புகாராக சென்று கொண்டிருந்தது.

இந் நிலையில் அதிமுக நிர்வாகிகள் அனைவருக்கும் ஜெயலலிதா ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். தலைமைக் கழகநிர்வாகப் பொறுப்பில் உள்ள அனைவரும் இனிமேல் தினசரி தலைமைக் கழகத்திற்குச் சென்று தொண்டர்களின்குறைகளைக் கேட்க வேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், வாரத்தில் ஏழு நாட்களும் ஒரு நிர்வாகி வீதம் யார், யார் எந்தக் கிழமைகளில் அலுவலகத்தில் இருக்கவேண்டும் என்று அட்டவணையும் போட்டுக் கொடுத்துள்ளார்.

வெள்ளிக்கிழமை டி.டி.வி.தினகரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தினகரன் வெள்ளிக்கிழமை தலைமைக்கழக அலுவலகத்திற்கு வந்து கட்சிப் பணிகளைக் கவனித்தார். காலை முதல் பிற்பகல் வரை அவர் அலுவலகத்தில்அமர்ந்திருந்தார்.

இதேபோல, ஒவ்வொரு நிர்வாகிக்கும் ஒரு கிழமை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியூரில் இல்லாத நாட்களில்செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், ஓ.எஸ்.மணியன் போன்ற மூத்த நிர்வாகிகள் தினசரி அலுவலகத்திற்குவந்து கட்சிப் பணிகளை கவனிக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X