• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ராம்மோகன் ராஜினாமா: புதிய ஆளுநர் பர்னாலா

By Staff
|

டெல்லி:

ஆளுநர் ராம்மோகன் ராவ் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். தன்னை வட கிழக்கு மாநிலங்களில்ஏதாவது ஒன்றுக்கு ஆளுநராக்க மத்திய அரசு முயன்றதாகவும், இதனால் தனது பதவியை ராஜினாமாசெய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆந்திர கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா நியமிக்கப்படவுள்ளார்.

நீதிமன்றம் மீண்டும் மறுப்பு:

முன்னதாக ராம்மோகனை மாற்றுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தமிழக அரசு விடுத்த கோரிக்கையைஏற்க உச்ச நீதிமன்றம் இன்று மீண்டும் மறுத்துவிட்டது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக அரசு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி லஹோத்தியிடம் ஒரு அவசர மனுவைத்தாக்கல் செய்தது. அதில், இந்த மனு மீதான விசாரணை முடியும் வரை மாநில ஆளுநரை நீக்கவோ, இடமாற்றம்செய்யவோ மத்திய அரசுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தது.

ஆனால், வழக்கை விசாரணைக்கு ஏற்க நீதிபதி இடைக்காலத் தடை ஏதும் விதிக்க மறுத்துவிட்டார்.

இந் நிலையில், தமிழகத்துக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்படவுள்ளதாகவும், ராம்மோகன் ராவ்தூக்கப்படவுள்ளதாகவும் முதல்வர் ஜெயலலிதாவிடம் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தொலைபேசிமூலம் நேற்றிரவு தகவல் தெரிவித்தார்.

இந்தத் தகவலை இன்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த தமிழக அரசின் வழக்கறிஞர் வேணுகோபால், ராம்மோகன்ராவ் மாற்றப்படுவது உறுதியாகிவிட்டது. இதனால், அவரை மாற்ற இப்போதாவது மத்திய அரசுக்கு இடைக்காலத்தடை விதிக்க வேண்டும்.

அரசியல் சட்டப்படி 5 ஆண்டுகள் பதவிக் காலம் முடிவதற்கு முன்பே கவர்னரை மாற்ற முடியாது என்றார்.

இதையடுத்துப் பேசிய தலைமை நீதிபதி லஹோத்தி, இந்த விஷயத்தில் இடைக்காலத் தடை எதையும் விதிக்கமுடியாது. இடைக்காலத் தடை விதிக்கும் விவகாரம் அல்ல இது. இந்த வழக்கு மீண்டும் வரும்போது விசாரிப்போம்என்று சொல்லி வழக்கை ஒத்தி வைத்தார்.

ராவ் ராஜினாமா:

இதையடுத்து ராம்மோகன் ராவ் இன்று பிற்பகலில் தனது பதவியை ராஜினாமா செய்தார். நவம்பர் 2ம்தேதியிலிருந்து தான் பதவி விலகுவது அமலுக்கு வருவதாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுக்கு அனுப்பியுள்ளபேக்ஸ் கடிதத்தில் ராம்மோகன் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவுக்கு தகவல் தருவதற்கு முன் கடந்த வாரமே, முறைப்படி ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்குஅனுப்பி வைக்குமாறு ராம்மோகன் ராவிடம் சிவராஜ் பாட்டீல் கேட்டதாகத் தெரிகிறது. ஆனால், தமிழக அரசுதொடர்ந்த வழக்கின் போக்கை வைத்து முடிவு செய்யக் காத்திருந்த ராவ், இன்று தனக்கு சாதகமான தீர்ப்புவராததையடுத்து ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.

ராவின் அறிக்கை:

கலாமுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பிய பின், ராம்மோகன் ராவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,

இரண்டு வாரங்களுக்கு முன்பு வடகிழக்கு மாநிலம் ஒன்றிற்கு நான் மாற்றப்படுவேன் என்று மத்திய அரசிடமிருந்துதகவல் வந்தது. அதற்கு வடகிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல எனது குடும்ப சூழ்நிலை ஒத்துழைக்காது. வேறுஏதாவது மாநிலத்திற்கு மாற்றுங்கள். இல்லையென்றால் மகிழ்ச்சியுடன் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்என்று தெரிவித்தேன்.

ஆனால் வேறு மாநிலத்திற்கு மாற்ற முடியாது என்று தகவல் வந்ததால் எனது பதவியை இப்போது ராஜினாமாசெய்துள்ளேன் என்று கூறியுள்ளார் ராவ்.

தெலுங்கு தேசத் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் பலத்த சிபாரிசில் 2002ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதிகவர்னரானார் ராம்மோகன் ராவ்.

திமுக தலைவர் கருணாநிதியின் நள்ளிரவுக் கைதையடுத்து பாத்திமா பீவி நீக்கப்பட்டதால் ராவ் கவர்னரானார்.இப்போது திமுகவின் நெருக்கடியால் பதவி இழந்துள்ளார்.

ராவோடு சேர்த்து கடந்த ஒரு வாரத்தில் 3 ஆளுநர்கள் பதவி விலகியுள்ளனர். ராஜஸ்தானின் மதன்லால் குரானாமற்றும் பிகாரின் ராம ஜோய்ஸ் ஆகியோர் ராஜினாமா செய்த மற்ற இரு ஆளுநர்கள் ஆவர். இருவரும் பா.ஜ.க.ஆட்சியின்போது நியமிக்கப்பட்டவர்கள்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X