• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழகத்தை கலக்கும் சாமியார்: இன்னொரு பிரேமானந்தா?

By Staff
|

சென்னை:

தமிழகத்தில் மீண்டும் ஒரு சாமியார் விவகாரம் வெடித்துள்ளது.

நிர்வாண பூஜை, செக்ஸ், பணம் பறிப்பு என போலி சாமியார் விவகாரங்களுக்கே உரித்தான அத்தனை அம்சங்களுடன்வெடித்துள்ளது இந்த புதிய சாமியார் குறித்த சர்ச்சை.

ராமானுஜ மடம்:

திருச்சியைச் சேர்ந்த சதுர்வேத சுவாமிகள் சென்னை தி.நகர் பசுல்லா ரோட்டில் கடந்த 2 ஆண்டுகளாக ராமானுஜர் மடம் என்றபெயரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். 32 வயதான இவரது ஒரிஜினல் பெயர் பிரசன்ன வெங்கடேச பெருமாள்.

இரு ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்த சுவாமிகள் டி.டி.கே. சாலையில் வசிக்கும் தொழிலதிபர் சுரேஷின் வீட்டு மாடியில்தங்கியிருந்தார். சுவாமிகளுக்கு சுரேசின் மனைவி மற்றும் 17 வயது மகள் பக்தைகளானார்கள். அவர்கள் உதவியுடன் தி.நகரில்ஆசிரமத்தை அமைத்துள்ளார் சுவாமிகள்.

Chaturvedhi Swamiji

லேன்சர் கார்..

ஏகப்பட்ட தொழிலதிபர்களின் குடும்பங்கள் இவருக்கு பக்தர்களானதால் பணத்துக்கு பஞ்சமில்லை. மிட்சுபிஸ் லேன்சர் கார், ஏர்கூல் செய்யப்பட்ட டெம்போ டிராவலர் வைத்துள்ளதோடு, புண்ணிய தலங்களுக்கு அடிக்கடி விமானங்களில் பறந்து சென்று வந்துகொண்டிருந்தார்.

இந் நிலையில் சுவாமிகள், தனது மனைவி மற்றும் மகளைக் கடத்தி ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றுவிட்டதாக தொழிலதிபர்சுரேஷ் போலீசாரிடம் புகார் கொடுத்தார். தன்னிடம் ரூ. 50 லட்சம் பணம் பறிப்பதற்காக இந்த வேலையை சுவாமிகள்செய்திருப்பதாக சுரேஷ் கூறியுள்ளார்.

இதையடுத்து ஹைதராபாத் விரைந்த மத்திய குற்றப் பிரிவு போலீஸார் சுவாமியை கைது செய்து சென்னை கொண்டு வந்தனர்.அவரை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை 15 நாள் காவலில்வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

போலீஸ் காவலில்:

அவரிடம் நிறைய விசாரிக்க வேண்டியுள்ளதால், அவரை போலீஸ் காவலில் வைக்க அனுமதிக்கக் கோரி காவல்துறையின்சார்பில் மனு செய்யப்பட்டது. இந்த மனுவைப் பரிசீலித்த நீதிமன்றம், அவரை 8 நாள் போலீஸ் காவலில் அனுப்ப உத்தரவிட்டது.

இதற்கிடையே கைது செய்யப்பட்டுள்ள சதுர்வேத சாமியார் தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன.

ஆஸ்ரமத்தில் சோதனை:

இதற்கிடையே சுவாமிகளின் ராமானுஜ மடத்திலும் இன்று போலீசார் சோதனை நடத்தி சில டைரிகள், ஆவணங்களைக்கைப்பற்றிச் சென்றதாகத் தெரிகிறது. இதில் சுவாமிகளுடன் தொடர்பு வைத்திருந்த பல விஐபிக்களின் பெயர்கள் உள்ளதால்,அவர்களிடமும் விசாரணை நடக்கலாம் என்று கூறப்படுகிறது.

தொழிலதிபரின் மனைவியும், மகளும் அவருடன் வாழ விரும்பாமல் தான் சுவாமியிடம் தஞ்சமடைந்ததாகவும், இதன்காரணமாகவே அவர்களை சாமியார் ஹைதராபாத் அழைத்துச் சென்றதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

சுவாமி நல்லவர்.. பக்தர்கள்:

இதுகுறித்து சுவாமியின் பக்தர் ஒருவர் கூறுகையில், சதுர்வேத சுவாமி யாரையும் கடத்தவில்லை. மொத்தமாக 50 பேருடன்நேபாள புண்ணியத் தலங்களில் சுற்றுப் பயணத்திற்கு சுவாமி ஏற்பாடு செய்திருந்தார். அவர்களில் கடத்தப்பட்டதாக கூறப்படும்இருவரும் அடங்குவர்.

இருவரும் சென்னையிலிருந்து விமானம் மூலம் ஹைதராபாத் வந்து, அங்கு எங்கள் பயணக் குழுவுடன் சேர்ந்து கொள்வதாகஇருந்தனர். ஆனால் அதற்குள் போலீஸார் அவசரப்பட்டு சுவாமியை கைது செய்து விட்டனர்.

வைணவ மார்க்கத்தில் தீவிர பற்று கொண்டு அதைப் பரப்ப ஆர்வம் காட்டியவர். சுவாமிக்கு ஆதரவாக நாங்கள் அனைவரும்கோர்ட்டிற்கு வந்து சாட்சி சொல்லத் தயாராக இருக்கிறோம் என்றார்.

இதற்கிடையே, தொழிலதிபரின் மனைவியும், மகளும் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கவுள்ளனர். அவர்களதுவாக்குமூலத்தைப் பொறுத்தே சதுர்வேத சுவாமியின் எதிர்காலம் நிர்ணயமாகும்.

இவர்களை பாலியல்ரீதியில் சுவாமிகள் துன்புறுத்தினாரா என்பது குறித்து மருத்துவ சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

எம்.பில் பயின்றவர்:

இந்த சதுர்வேத சுவாமிகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் எம்.பில் பட்டம் பெற்றுள்ளார். வேதங்களைமுறையாகப் படித்தறிந்தவர் என்று அவரது பக்தர்கள் கூறுகிறார்கள்.

2 ஆண்டுகளாக சாமியார் குறித்து தவறான தகவல் எதுவும் நாங்கள் கேள்விப்பட்டதில்லை என்று கூறும் அவரது பக்தர்கள்,சாமியாரை ஏதோ இன்னொரு பிரேமானந்தா மாதிரி சித்தரிப்பது மனதை வருத்துகிறது என்கின்றனர்.

நிர்வாண கோலத்தில் பூஜை..

ஆனால், இன்னொரு தரப்போ பூஜை என்ற பெயரில் பெண்களை தனி அறையில் அமர வைத்துவிட்டு இவரே நிர்வாணகோலத்தில் வந்து நின்றெல்லாம் ஷாக் கொடுப்பார். நிர்வாண நிலையில் பெண்ணின் முன் அமர்ந்து தியானம் செய்வது போன்றகுஜால் வேலைகளை எல்லாம் செய்வார் என்கின்றனர்.

பூஜை என்ற பெயரில் இவரால் பாலியல்ரீதியில் சிதைக்கப்பட்ட பல பணக்கார வீட்டுப் பெண்கள் பலர் என்கின்றனர் இவர்கள்.

முழு விசாரணைக்குப் பிறகு தான் இவர் பிரேமானந்தா நம்பர் டூவா அல்லது ஒரிஜினல் சுவாமியா என்பது தெரியவரும். இவர் மீதுபணம் பறிக்க முயற்சி, ஆள் கடத்தல் உள்பட 23 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X