For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நகை கடை அதிபர் மீது பெண்கள் "செக்ஸ்" புகார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள நகைக் கடையில் பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை, கடையின் அதிபர்ரகசிய கேமராக்கள் மூலம் பார்த்து வக்கிரத்துடன் நடந்து கொள்வதாக அந்தக் கடையின் ஊழியர்கள் சென்னைகாவல்துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல நகைக் கடை நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தக் கடையை கோடம்பாக்கம்பகுதியில் தொடங்கியது. இதை கேரள முன்னாள் முதல்வர் கருணாகரனின் மகள் பத்மஜா தான் திறந்து வைத்தார்.

இந்தக் கடையில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் ஐந்து பேர் உள்பட 12 ஊழியர்கள் சென்னை காவல்துறைஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு ஆணையர் நடராஜை சந்தித்து பரபரப்பு புகார் தெரிவித்தனர்.

புகார் கொடுத்தவர்களில் ஒருவரான பத்மாவதி என்பவர் நிருபர்களிடம் கூறுகையில்,

இந்த நகைக் கடையில் பெண் ஊழியர்களுக்கு சீருடை கொடுக்கப்பட்டுள்ளது. அது முழங்கால் வரை மட்டுமேஉள்ள ஸ்கர்ட் ஆகும்.

இந்த உடையை கடைக்கு வந்த பிறகுதான் போட்டுக் கொள்ள வேண்டும், அதேபோல போகும்போதுகடையிலேயே வைத்து விட்டுப் போக வேண்டும்.

இதனால் பெண் ஊழியர்கள் அனைவரும் எங்களுக்கென கொடுக்கப்பட்ட ஆடை மாற்றும் அறைக்குள் சென்றுஇந்த சீருடையை மாற்றிக் கொள்வோம். ஆனால் இந்த ஆடை மாற்றும் அறையில் கடை உரிமையாளர்விஸ்வநாதன் ரகசிய கேமராவைப் பொருத்தியிருந்தது எங்களுக்குத் தெரியாது.

நாங்கள் சேலை, சுரிதார்களை அவிழ்த்துவிட்டு இந்த ஸ்கர்ட் அணிவதை கடையின் உரிமையாளர் ரகசியகேமராக்கள் மூலம் பார்த்து ரசித்து வந்துள்ளார் விஸ்வநாதன்.

எங்கள் உடலில் காணப்படும் அடையாளங்கள், மச்சங்கள், காயங்கள் ஆகியவற்றை அவ்பவப்போது குறிப்பிட்டுக்கூறி எங்களிடம் அவர் மிக மோசமான கமெண்ட்களையும் அடிப்பார்.

ரகசிய கேமராவில் எங்கள் உடலின் அடையாளங்களைப் பார்த்து வைத்துக் கொண்டு இப்படிக் கேவலமாகநடந்துள்ளார் விஸ்வநாதன். இதை அறிந்ததும் எங்களுக்கு பெரும் அவமானமும், அதிர்ச்சியும் ஏற்பட்டது.

இதை நாங்கள் தட்டிக் கேட்டபோது, எங்கள் மீது திருட்டுப் புகார் சுமத்தி மிரட்டியது கடை நிர்வாகம். இதனால்விஸ்வநாதன் மீது செக்ஸ் கொடுமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும், கடையில் வேலைக்கு சேரும்போதே, தங்களது கல்விச் சான்றிதழ்களை அவர்கள் வாங்கி வைத்துக்கொண்டதாகவும், தற்போது அதை தர மறுப்பதாகவும் ஆண் ஊழியர்களும் புகாரில் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விசாரணைக்கு ஆணையர் நட்ராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து துணை கமிஷ்னர் முருகன், உதவிகமிஷ்னர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான படை இந்த நகைக் கசையில் சோதனை நடத்தியது.

கடையில் வேலை பார்க்கும் பிற பெண்களிலும் போலீசார் விசாரித்தனர். அப்போது நகைக் கடை அதிபர்விஸ்வநாதன் தங்களிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர்களும் புகார் கூறினர்.

பெண் பணியாளர்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய காமராக்கள் இருந்ததா என்றும் போலீசார்சோதனையிட்டனர். ஆனால், கடையைக் கண்காணிக்கும் குளோஸ் சர்க்யூட் கேமராக்கள் தவிர, உடை மாற்றும்அறையில் சிறிய, ரகசிய கேமராக்கள் இருந்ததற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை.

போலீசில் புகார் கூறியதையடுத்து அவற்றை விஸவநாதன் உடனடியாக அகற்றிவிட்டதாக பெண் பணியாளர்கள்கூறுகின்றனர்.

இதையடுத்து விஸ்வநாதனிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, எனக்கு துபாயிலும் கடை உள்ளது.வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே இங்கிருப்பேன். கடையை கண்காணிக்க 37 கேமராக்கள் உள்ளன. உடை மாற்றும்அறையில் எல்லாம் கேமரா வைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

அவரிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X