• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

லெபனான், துருக்கி, ஈரான், பாகிஸ்தான், சிறை.. ஒரு வழியாய் மீண்டு வந்த பாஸ்கரன்

By Staff
|

டெல்லி:

ஏராளமாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில், சட்டவிரோதமான வழியில் லண்டன் செல்ல முயன்ற திருவாரூரைச் சேர்ந்த பாஸ்கரன்என்பவர் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டு தற்போது விடுதலையாகியுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன். 43 வயதாகும் இவர் கணித பட்டதாரி. லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் அருகேஉள்ள ஒரு பள்ளியில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வந்தார்.

பத்து ஆண்டுகள் அங்கு பணியாற்றி நல்ல வசதியுடன் இருந்த பாஸ்கரனுக்கு திடீரென இன்னும் பெரிய பணக்காரனாக வேண்டும் என்றஆசை வந்தது. லண்டன் போக முடிவு செய்தார்.

பெய்ரூட்டில் உள்ள ஓர் ஏஜென்ட் மூலம் சட்டவிரோதமாக லண்டன் செல்ல முயன்றார். அவருடன் 22 பேர் லண்டன் செல்லஆயத்தமானார்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லுக்கு இவர்கள் அழைத்ச செல்லப்பட்டனர்.

அங்கு ஒரு இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். வெளியில் செல்லக் கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

ஆனால் திருவாரூரில் உள்ள தனது குடும்பத்தினருக்கு போன் செய்வதற்காக வெளியில் வந்த பாஸ்கரனை துருக்கி போலீஸார் கைதுசெய்தனர். உரிய விசா இல்லாமல் நாட்டுக்குள் நுழைந்த அவரை ஈரான் நாட்டு போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.

பாஸ்கரனை விசாரித்த ஈரான் போலீஸார் அவரை பாகிஸ்தான் எல்லைக்குக் கொண்டு சென்றனர். அங்கு இரு நாட்டையும் பிரிக்கும்தடுப்புச் சுவரில் பாஸ்கரனை ஏற்றி, பாகிஸ்தான் எல்லைக்குள் குதிக்குமாறு உத்தரவிட்டனர். இல்லாவிட்டால் சுடுவோம் என மிரட்டினர்.

இதையடுத்து வேறு வழியில்லாமல் பாகிஸ்தான் எல்லைக்குள் குதித்த பாஸ்கரனை அந்நாட்டு போலீஸார் கைது செய்து சிறையில்அடைத்தனர்.

பலுசிஸ்தான் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பாஸ்கரன், நீதிமன்ற உத்தரவுப்படி 5 மாத சிறையில் அடைக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு கேரளாவைச் சேர்ந்த 6 பேரின் நட்பு கிடைத்தது. அவர்கள் அனைவரும் மீனவர்கள். ஓமனில் வசிக்கும் அவர்கள்மீன்பிடிக்க வந்தபோது அவர்களது படகுகள் சேதமடைந்ததால் பாகிஸ்தான் மீனவர்கள் உதவியுடன் பலுசிஸ்தானுக்குள் நுழைந்தபோதுபோலீஸாரால் கைது செய்யப்பட்டவர்கள்.

அந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்த அனைவரும் மிகப் பெரிய குற்றவாளிகள். ரூ. 2.5 லட்சம் தங்கத்தைக் கொள்ளையடித்ததாக கைதுசெய்யப்பட்டு சிறையில அடைக்கப்பட்டிருந்தவர் மட்டும்தான் மிகச் சிறிய குற்றம் செய்தவர் என்றால் பார்த்துக் கொள்ளுகள்.

பாஸ்கரனும், 6 கேரளாக்காரர்களும் விடுதலையாக இந்தியத் தூதரகம் நடவடிக்கை எடுத்து வந்தது. ஆனால் நடவடிக்கைகள்தாமதமானதால் வெறுத்துப் போன ஏழு பரும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தனர்.

யார் முதலில் சாகலாம் என சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்துள்ளனர். அப்போது விஜயன் என்ற கேரள நபரின் பெயர் முதலில்வந்துள்ளது. ஆனால் சாகத் தயங்கினார் விஜயன். இதனால் திட்டம் கைவிடப்பட்டது.

இந் நிலையில் சமீபத்தில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் பாகிஸ்தான் சென்றார். அப்போது பஞ்சாபிய இளைஞர்களை மட்டும் விடுதலைசெய்வது என உடன்பாடு ஏற்பட்டது. இதை பாஸ்கரன் கடுமையாக எதிர்த்துள்ளார். அமரீந்தர் சிங்குடனேயே நேரடியாக பேசி தங்களதுநிலையை விளக்கியுள்ளார்.

இந் நிலையில் திருவாரூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரமுகர் ராமநாதன் என்பவரும் தனது கட்சியின் உதவியுடன் இந்தியதூதரகத்தை அணுகி பாஸ்கரனை விடுவிக்க நடவடிக்கை எடுத்தார்.

ஒரு வழியாக பாஸ்கரன் உள்ளிட்ட 528 பேரை (பாஸ்கரனைத் தவிர மற்ற அனைவரும் மீனவர்கள்) சமீபத்தில் பாகிஸ்தான் அரசு சமீபத்தில்விடுதலை செய்தது. வாகா எல்லை வழியாக இவர்கள் அனைவரும் இந்தியாவுக்குள் நுழைந்தனர்.

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இவர்களை வரவேற்றார். அப்போது சிறையில் தன்னிடம் மிக தைரியமாக வாதாடிய பாஸ்கரனைஅடையாளம் கண்டுகொண்ட அம்ரீந்தர் சிங் அவரை பாராட்டவும் தயங்கவில்லையாம்.

பாஸ்கரன் நிருபரிடம் கூறுகையில், திருவாரூரில் சில காலம் இருந்து விட்டு மீண்டும் லெபனான் செல்ல திட்டமிட்டுள்ளேன். அங்குபணியாற்றி வரும் பள்ளியில் விடுமுறை எடுத்திருப்பதால் மீண்டும் வேலையில் சேர பிரச்சினை இருக்காது என்றார்.

வியாழக்கிழமை டெல்லி கேரள பவனுக்கு வந்த பாஸ்கரன், ரயில் மூலம் தமிழகம் புறப்பட்டார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X