• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நெருங்குகிறது புயல்: கொந்தளிப்பில் கடலோர தமிழகம்

By Staff
|

நாகை:

புயல் நெருங்கி வருவதால் நாகை மாவட்டத்தின் பல பகுதிகளில், குறிப்பாக வேதாரண்யத்தில் கடல் கொந்தளிப்பு மிகவும்கடுமையாக உள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபனூஸ் புயல் இன்று பிற்பகலில் புதுவை-தொண்டிக்கு இடையே கரையைக் கடக்கும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாகை, கடலூர் மாவட்டங்களில்பலத்த மழையும், சூறைக் காற்றும் வீசி வருகிறது. கடந்த மூன்று நாட்களாகவே நாகை கடல் பகுதிகள் கொந்தளிப்புடன்காணப்படுகின்றன.

புஷ்பவனம், வானவன் மாதேவி உள்ளிட்ட பல கடற்பகுதிகள் இப்போதே மோசமான நிலைக்கு மாறி வருகின்றன. கடல்கொந்தளிப்பு காரணமாக கடற்கரை ழுவதும் சேறும், சகதியுமாக மாறி விட்டது. கோவில்பத்து, நாலுவேதபதி, பெரிய குத்தகை,வெள்ளப் பள்ளம், கோடியக்கரை, கொளித்தீவு, ஆறுகாட்டுத்துறை ஆகிய பகுதிகளில் கடல் நீர் உட் புகுந்துள்ளது.

வேதாரண்யம் பகுதியில் கடல் கொந்தளிப்பு கடுமையாக உள்ளது. இந்தப் பகுதி கிராமங்களில் வசித்து வருவோர் அங்கிருந்துவெளியேற்றப்பட்டு வருகின்றனர். காவல்துறையினர், தீயணைப்புப் படையினர், மீட்புப் படையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

நாகை கடலோரத்தில் உள்ள 70 கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர். சுனாமி தற்காலிக குடியிருப்புகளில்வசித்து வந்தவர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுறைவிடப்பட்டுள்ளது.

ஆறுகாட்டுத்துறையில் இன்று காலை கடல் 50 அடி தொலைவுக்கு உள்வாங்கியதால், மக்கள் பீதியடைந்தனர். சுனாமி தாக்குதல்வந்து விடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

காவிரி டெல்டாவில் கன மழை:

இதற்கிடையே புயல் சின்னம் காரணமாக காவிரி டெல்டாப் பகுதி மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, நாகை ஆகியமாவட்டங்களில் கன மழை பெய்து இயல்பு வாழ்க்கையை பாதிப்படைய வைத்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு தலே மழை பெய்து வருகிறது. இதனால் தெருக்கள்,சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. ஓரத்தநாடு, கண்ணனாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகாரணமாக சமயன்குடி கிராமத்தில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதேபோல புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவாரூர், திருச்சி ஆகியமாவட்டங்களில் நல்ல மழை காணப்படுகிறது. காவிரி டெல்டாவில் அதிகபட்சமாக தஞ்சை, சீர்காழியில் 70 மில்லிமீட்டர்,பாபநாசம் 56, ஓரத்தநாடு 53, திருவையாறு 48, பேராவூரணி 40, கும்பகோணம் 35, கொள்ளிடம் 33.5, திருத்துறைப்பூண்டி 30,மயிலாடுதுறை 29, நிாகை 26, திருக்காட்டுப்பள்ளி 25, திருவாரூர் 18, கரூர் 18, சின்ன தாராபுரம் 10 மில்லி மீட்டர் எனப்பதிவாகியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். தற்போது 21 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளன. 10க்கும் மேற்பட்ட சமையல் தொழிலாளர்கள் தயார் நிலையில் மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் ஒயர் லெஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் புயல் குறித்து தகவல்பரிமாற்றத்திற்கு வழிசெய்யப்பட்டுள்ளது. வீராணம் ஏரியில் 41.8 அடி தண்ணீர் இருப்பு இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.50 கிராம மக்கள் சுமார் 51 இடங்களில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சிதம்பரம் மற்றும் கடலூர் பகுதியில் 10க்கும் மேற்பட்ட படகுகள் தயார் நிலையில் உள்ளன. புயல் சின்னம் காரணமாக கடலூர்மாவட்ட மீனவர்கள் யாரும் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. படகுளை பாதுகாப்பானஇடங்களில் கட்டி வைக்குமாறு மீன-வ-ர்-கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X