For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குஜால் மன்னனாக வாழ்ந்த போலி பிஷப் யோபு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Yobu Saravanan

போலி பிஷப் ஆனந்தராஜ் பாணியில், ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறிகாண்டிராக்டர்களிடம் பல கோடி பணத்தை மோசடி செய்துள்ளதாகத் தேடப்பட்டுவரும் பிஷப் யோபு சரவணன் மோசடிமூலம் சம்பாதித்த பணத்தை வைத்துஅழகிகளுடன் குஜால் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.

வேலூர் காட்பாடியை சேர்ந்த யோபு சரவணன், கல்வாரி இன்டர்நேஷனல் மிஷன்டிரஸ்ட் என்ற பெயரில் சென்னை முகப்பேரி அலுவலகம் வைத்துக் கொண்டுஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை அறிவித்து அதன் மூலம்காண்டிராக்டர்களிடம் பல கோடி பணத்தை வசூலித்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

இவர் மீது ஏராளமான காணடிராக்டர்கள் போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். தனதுநான்கு மனைவிகளுடன் தலைமறைவாகி விட்ட யோபுவைபோலீஸார் தேடிவருகின்றனர்.

இந் நிலையில் யோபு குறித்த பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. திருமலை கிரிஎன்ற இடத்திற்கு யோபு சரவணன் படு சொகுசாக வந்துள்ளார். அவருடன் மனைவிசாந்தியும் வந்திருந்தார். இன்னொரு பெண்ணும் அவர்களுடன் வந்திருந்தார்.

சுனாமி நிவாரண நிதியின் கீழ் வீடு கட்டித் தரப்போவதாக அங்கிருந்தகாண்டிராக்டர்களிடம் யோபு கூறியுள்ளார். இதுகுறித்த தகவல்களை ஞாயிற்றுக்கிழமைநடைபெறவுள்ள ஜெபக் கூட்டத்திற்கு வரும்போது தெரிவிப்பதாகவும் யோபுகூறியுள்ளார்.

ஆனால் அப்பகுதியினருக்கு யோபு மீது சந்தேகம் வந்துள்ளது. கடலே இல்லாதஇடத்தில் ஏன் சுனாமி நிதியின் கீழ் வீடு கட்டித் தருகிறார் என்று யோசித்துள்ளழனர்.

இருந்தாலும் ஒரு சிலர் யோபு வரச் சொன்ன இடத்துக்குப் போயுள்ளனர்.

சேலத்தில் ஒரு குறிப்பிட்ட ஹோட்டலுக்கு வரச் சொல்லியிருந்தார் யோபு அங்குஅவர்கள் போனபோது குடிபோதையில் இருந்துள்ளா. மேலும், அவரது ரூமில் குஜால்பெண்கள் சிலரும் போதையில் கிடந்துள்ளனர்.

இதைப் பார்தத அவர்கள் யோபு மோசடிப் பேர்வழி என்பதை உணர்ந்து திரும்பி வந்துவிட்டனர். இதை அந்தப் பகுதியினர் இப்போது போலீசிடம் தெரிவித்துள்ளனர்.

அதே போல வேலூர் மாவட்டம் அரியூர் பகுதியில் அரசுக்குச் சொந்தமானபுறம்போக்கு நிலத்தை வளைத்து யோபு சரவணன் ஒரு சர்ச் கட்டியுள்ளார். இந்தசர்ச்சை ரூ. 12 லட்சம் செலவிலும் அருகே தனக்கு ஒரு வீட்டை ரூ. 4 லட்சம்செலவிலும் கட்டியுள்ளார்.

இந்த சர்ச்சுக்கு மக்களை வரவழைப்பதற்காக சர்ச்சுக்கு வருவோருக்கு 1 மூட்டைஅரிசி, செலவுக்கு ரூ. 2,000 பணம் என அள்ளி விட்டு ஏழை மக்களை ஈர்த்துள்ளார்.இதனால் நிறைய பேர் வர ஆரம்பித்துள்ளனர். தற்போது இந்த சர்ச் மூடப்பட்டுக்கிடக்கிறது.

இவ்வாறு யோபு குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வந்து குவிந்தபடி உள்ளனர் போலீசார்மண்டை காய்ந்து போயுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X