For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலை புலிகளை நான் ஆதரிக்கிறேனா?: ஜெ

By Staff
Google Oneindia Tamil News

ஆண்டிப்பட்டி:

திமுக அரசு என் மீது எத்தனை வழக்குகளைப் போட்டாலும் அதை சந்திக்கத் தயாராகஇருக்கிறேன் என்று அதிமுக பொதுச் ஜெயலலிதா கூறியுளளார்.

ஆண்டிப்பட்டி தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அங்கு நடந்தபிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்தகொண்டு ஜெயலலிதா பேசினார். அவர்கூறியதாவது:

அன்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்ட எனக்குமீண்டும் ஆதரவு அளித்து என்னை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்ததற்காக உங்கள் அனைவருக்கும்என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் ஒரு முறை நீங்கள் அனைவரும் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை உலகத்திற்கு வெளிகாட்டிஇருக்கிறீர்கள். மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை எனக்கு அளித்துஇருக்கிறீர்கள். உங்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இந்த நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொள்கிறேன் என்பதை தெரிந்ததும் இன்று மத்தியலும்,மாநிலத்திலும் ஆட்சி செய்கிறன்றவர்கள் எவ்வளவு சின்னபுத்தி இருக்கின்றது என்பதை காட்டி விட்டார்கள்.

நான் முதலில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் இங்கு வருவதாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அந்தவிமானம் மும்பையில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்து அங்கிருந்து மதுரை வர வேண்டும். ஆனால்11.45 மணிக்கு புறப்பட வேண்டிய அந்த விமானம் 12 மணிக்குத் தான் சென்னைக்கு வரும் என்றார்கள்.

பின்னர் 1 மணிக்குத்தான் வரும் என்றார்கள். அதன் பின்னர் அந்த விமானம் மும்பையில் இருந்தேபுறப்படவில்லை என்று தெரிய வந்தது. வேறு ஒரு தனியார் நிறுவனம் நடத்துகின்ற விமானம் 12.25 மணிக்குபுறப்படுவதாக சொன்னார்கள். அதில் உடனே டிக்கெட் எடுத்து அந்த விமானத்தில் ஏறி அமர்ந்து விட்டேன்.

அதன் பின்னர் வேண்டும் என்றே ரன்வே காலியாக இல்லை. வேறு சில விமானங்கள் இறங்குகின்றன என்றுசொல்லி முடிந்த வரை விமானம் புறப்படுவதை தடை செய்தார்கள். ஆனால் நம்மை யார் தடுத்தாலும் சிறு சிறுதடைகள் தான் அவர்களால் ஏற்படுத்த முடியும். அதற்காக நம்முடைய மக்கள் சக்திக்கு முன்னால் அவர்கள்தலைகுனிந்து தான் ஆக வேண்டும்.

என் சக்திக்கு உட்பட்ட வரை நான் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உங்களுக்கு என்னால் முடிந்தநன்மைகளை நான் என்றைக்கும் செய்து கொண்டே இருப்போன் என்ற உறுதியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று நல்ல சக்திக்கும், தீய சக்திக்கும் இடையே போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எப்படியோகருணாநிதி என்னும் தீய சக்தி மீண்டும் ஆட்சியை பிடித்து விட்டார். புரட்சித் தலைவர் எம்ஜிஆர் என்னசெய்தாலும், எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் மக்களுக்காகவே அதை செயல்படுத்தினார்.

அதைபோலவே நான் எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் தமிழக மக்களின் நலனுக்காகவே, நன்மைக்காகவேஅந்த திட்டங்களை கொண்டு வந்தேன். ஆனால் கருணாநிதி எதை செய்தாலும் தன்னுடையமக்களுக்காகத்தான், தன்னுடைய குடும்பத்தினர்களுக்காகத் தான் அவர் செய்வார். இன்று கருணாநிதியைஎதிர்கின்ற ஒரே கட்சி தமிழ் நாட்டில் அதிமுக தான்.

கருணாநிதியை எதிர்கின்ற ஒரே அரசியல் தலைவர் நான் தான். மற்றவர்கள் எல்லாக்கும் ஜால்ரா தட்டுவதற்கேநேரம் பற்றவில்லை. அதனால் கருணாநிதி என்னை அழித்து விட வேண்டும், என்னை ஒழித்து விட வேண்டும்,அப்படி செய்து விட்டால் அதிமுகவை அழித்து விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார். ஆனால் அது நடக்காது.

இந்த கருணாநிதி அல்ல, இன்னும் எத்தனை கருணாநிதி பிறந்து வந்தாலும் அதிமுகவை யாராலும் அழிக்கமுடியாது. கருணாநிதி எப்படியாவது என்னை களங்கப்படுத்த வேண்டும் என்று குற்றச்சாட்டுகளை கூறிபடாதபாடு படுகிறார். கூட்டணி கட்சி தலைவர்களை எல்லாம் கூப்பிட்டு எதை எதையோ பேச வைக்கிறார்.

என்னையும், அதிமுகவையும் அழிக்க திமுக மைனாரிட்டி அரசு சதி செய்துவருகிறது. என் மீது வழக்குகளைப் போட முயலுகிறார்கள். கடந்த முறை என் மீதுபல பொய் வழக்குகளைப் போட்டது திமுக அரசு. ஆனால் அத்தனையும் பொய்என்பது நிரூபணமானது. 12 வழக்குகளிலிருந்து நான் விடுதலையாகி வந்தேன்.

இந்த முறையும் என் மீது பொய் வழக்குகளைப் போட்டு என்னையும்,அதிமுகவையும் அழிக்க சதி செய்கிறது திமுக அரசு. ஆனால் இதைக் கண்டு நான்அஞச மாட்டேன். என்றைக்கும் கருணாநிதியை சந்திக்க நான் அஞ்சியதே இல்லை.

தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, நான் விடுதலைப்புலிகள் அமைப்புடன்ரகசிய தொடர்பு வைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அவர்கள் உதவியுடன் இந்தஆட்சியை கவிழ்க்க சதி செய்வதாகவும குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை. மதிமுக பொதுச் செயலாளர்வைகோவை நான அண்ணன் என்று அழைத்ததை ஆதாரமாக அவர் கூறுகிறார். அவர்என்னை விட வயதில் மூத்தவர். அப்படி இருக்கையில், அண்ணன் என்றுஅழைத்ததில் என்ன தவறு?

மதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் நான் விடுதலைப் புலிகளை ஆதரிப்பதாககிருஷ்ணசாமி கூறுகிறார். அதே மதிமுக கூட்டணியில் தான் நாடாளுமன்றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்திருந்தது. அப்படியென்றால் காங்கிரஸ்விடுதலைப் புலிகளை ஆதரித்ததா?

1993ம் ஆண்டு சென்னையில் பாமக பேரணி நடத்தியது. அந்தப் பேரணியில்பிரபாகரன், ராஜீவ் கொலையாளிகள் தனு, சிவராஜன் ஆகியோர் படங்களை ஏந்திச்சென்றனர். அந்தப் பேரணிக்குத் தலைமையேற்ற டாக்டர் ராமதாஸ் தான், காங்கிரஸ்தலைவரின் சம்பந்தி. அப்போது நான் முதலமைச்சராக இருந்தபோது, பாமகவைதடைசெய்ய கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். ஆனால் பிரதமர் தடைசெய்யவில்லை.

2004 மக்களவைத் தேர்தலில் பாமகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது,இப்போதுள்ள அமைச்சரவையிலும் ராமதாஸின் மகன், கிருஷ்ணசாமியின் மருமகன்அன்புமணி அமைச்சராக உள்ளார். இதையெல்லாம் மறந்து விட்டு கிருஷ்ணசாமிஎங்கள் மீது பாய்கிறார்.

அதிமுக தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என மத்தியஅரசுக்கு கடிதம் எழுதியது. 1991ம் ஆண்டு முதல் இன்று வரை அந்தத் தடையைதொடர்ந்து நீடிக்கவும் வலியுறுத்தி வருகிறேன்.

நான் விடுதலைப் புலிகளை ஒருபோதும் ஆதரிக்கவில்லை, எதிர்காலத்திலும்ஆதரிக்க மாட்டேன். எனது இந்த நிலையில் எந்த மாற்றம் இல்லை. உறுதியாகஇருக்கிறேன். எனவே என் மீதான இந்த குற்றச்சாட்டு மிகவும் அபாண்டமானது.

கடந்த காலத்தில் குஜ்ரால் பிரதமராக இருந்த போது, ஜெயின் கமிஷனின்இடைக்கால அறிக்கை வெளியானது. அதில் திமுக மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.இதனால் குஜ்ரலால் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திமுக திரும்பப் பெற்றது.

இதனால் நாடாளுமன்றத்துக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.இந்த வரலாறுகளை மறந்து விட்டு காங்கிரஸ் தலைவர் பேசி வருகிறார்.

திமுகவைத் திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வாறு பேசி வருகிறார்கிருஷ்ணசாமி. நான் பாரதத் தாயின் மகள். உண்மையான தேசப்பற்று கொண்டவள்.பாரதத்தின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் எந்த ஒரு அமைப்புக்கும் நான்ஆதரவு தர மாட்டேன்.

திமுக மைனாரிட்டி அரசு ஏராளமான வாக்குறுதிகளை அள்ளி வீசியது. இப்போதுதிட்டங்களை அறிவித்து வருகின்றது. அதில் பல இலவச திட்டங்கள். ஆனால் இதில்ஒரு திட்டமும் முழுமையாக நிறைவேற்ற முடியாது. காரணம் எந்தத் திட்டத்திற்கும்முழுமையாக நிதி ஒதுக்கப்படவில்லை.

நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் நிலம் தருவோம் என்றார்கள்.அப்படி அளிக்க வேண்டுமானால் 1.72 கோடி ஏக்கர் நிலம் தேவை. அதற்கு கடலில்தான் போய் அளந்து எடுக்க முடியும்.

53 லட்சம் குடும்பங்களுக்கு இலவச கலர் டிவி என்று வாக்குறுதி அளித்தனர். இதற்குரூ. 750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 25 லட்சம் பேருக்கு வழங்கலாம்.அவ்வாறு கொடுத்தாலும் கேபிள் இணைப்பை இலவசமாக கொடுப்பார்களாஎன்றால் இல்லையாம்.

ஒருவேளை கேபிள் கட்டணத்தை டிவி பெற்றவர்கள் செலுத்தினாலும்,அவர்களுக்காக அரசு செலுத்தினாலும் கூட ஆண்டுக்கு ரூ. 300 கோடி கருணாநிதிகுடும்பத்துக்குச் செல்லும்.

இப்படி ஒரு குடும்பத்தினர் மட்டுமே சுரண்டும் நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் நான் கேபிள் டிவி சட்டத்த்தைக் கொண்டு வந்தேன். ஆனால் அதற்கு ஆளுநர்அனுமதி அளிக்கவில்லை. இப்போது திமுக ஆட்சிக்கு வந்திவுடன் சட்டததையேவாபஸ் பெற்று விட்டனர்.

இலவச காஸ் இணப்பு, அடுப்பு என்கிறார்கள். அப்படியானால் சிலிண்டருக்கு யார்பணம் கொடுப்பது? இதை அறிவிப்பார்களா?

திருமண வீட்டில் பன்னீர் தெளிப்பது போல அறிவித்துள்ள இலவச திட்டங்களுக்குகுறைந்த அளவிலேயே நிதி ஒதுக்கீடுசெய்துள்ளனர். இதன் மூலம் எந்தத்திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்ற முடியாது.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் சிக்குன் குனியா நோயால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால்கருணாநிதி முன்னிலையில் சட்டசபையில் வைத்து சுகாதாரத்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் சிக்குன்குனியாவால் யாரும் பலியாகவில்லை என்று பொய் சொல்கிறார். எனக்கு தெரிந்தவரையில் 150க்கும்மேற்பட்டோர் வரை இறந்து இருக்கிறார்கள்.

சிக்கன் குனியா நோய் தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தாவிட்டால் அதிமுக மற்றும் கூட்டணிகட்சி சார்பில் கண்டன போரட்டங்கள் நடத்தப்படும் என்றார்.

முன்னதாக மதுரை விமான நிலையத்திலிருந்து ஆண்டிப்பட்டி வரை வழியெங்கும்அதிமுகவினர் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X