For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியைக் கலக்கிய சிலை திறப்பு அரசியல்!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகிய இருவரின்டெல்லி பயணங்களின்போது நடந்த நிகழ்வுகள் தேசிய அளவில்கவனிப்புக்குரியதாகியிருக்கிறது.

இதுவரை நாடாளுமன்ற வளாகத்தில் பல தலைவர்களின் சிலைகள்திறக்கப்பட்டுள்ளன. ஆனால் அப்போதெல்லாம் ஏற்படாத ஒரு பரபரப்பு எம்.ஜி.ஆர்.மற்றும் முரசொலி மாறன் சிலை திறப்பு நிகழ்ச்சிகளின்போது ஏற்பட்டு பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

முதலில் எம்.ஜி.ஆர் சிலை திறக்கப்பட்டது. இதற்காக ஜெயலலிதா, அதிமுகஎம்எல்ஏக்கள் புடை சூழ டெல்லிக்குப் பறந்தார். கூடவே மதிமுக பொதுச் செயலாளர்வைகோவும் கலந்து கொண்டார்.

திசிலை திறப்புக்குப் பின்னர் ஜெயலலிதா சமாஜ்வாடிக் கட்சி பொதுச் செயலாளர்அமர்சிங்கின் வீட்டுக்குப் போனார். அங்கு அவரை உத்தரப் பிரதேச மாநில முதல்வர்முலாயம் சிங் யாதவ் சந்தித்துப் பேசினார்.

தமிழக அளவிலும் மிகப் பெரிய அணி மாற்றம் விரைவில் ஏற்படும் என புகையைப்போட்டு விட்டு சென்னைக்குத் திரும்பினார் ஜெயலலிதா.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அடுத்த பரபரப்பு முரசொலி மாறன் சிலை திறப்புவிழாவின்போது நடந்தது. சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு முன்கூட்டியே வந்து விட்டகருணாநிதி தனி இருக்கையில் அமர்ந்திருந்தார்.

நிகழ்ச்சிக்கு வந்த துணை ஜனாதிபதி ஷெகாவத், சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி,பாஜக தலைவர் அத்வானி உள்ளிட்ட தலைவர்களை கருணாநிதி வரவேற்று ஒருகைகுலுக்கி, நலமா என்று விசாரித்ததோடு நிறுத்திக் கொண்டார்.

ஆனால், ஒரு தலைவரைப் பார்த்ததும் முகம் பிரகாசமாகி ஆவலுடன் அவருக்காகதனது கைகளை நீட்டினார் கருணாநிதி. அவர் வேறு யாருமல்ல, சாட்சாத்அமர்சிங்தான்.

ஜெயலலிதாவை தனது வீட்டிற்கு வரவழைத்து உ.பி. முதல்வருடன் சந்திப்புக்குஏற்பாடு செய்திருந்த அமர்சிங், மாறன் சிலை திறப்பு விழாவுக்கும் வந்தது அரசியல்வட்டாரத்தில் விழி உயரச் செய்தது.

கருணாநிதியிடம் சென்ற அமர்சிங் அவரிடம் கைகுலுக்கி நலம் விசாரித்தார். மற்றதலைவர்களைப் போல வெறும் குலுக்கலோடு நின்று விடாமல் அமர்சிங்கின்கைகளை விடாமல் பிடித்துக் கொண்டே இருந்தார் கருணாநிதி.

அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டியும்வந்தார். இருவரிடமும் நீண்ட நேரம் பேசினார் கருணாநிதி. அப்போது அமைச்சர்தயாநிதி மாறன் வந்து ஏதோ சொல்ல உரையாடல் நின்றது. கருணாநிதி, அமர்சிங்கின்கைகளும் பிரிந்தன.

கருணாநிதி என்ன பேசியிருப்பார், அமர்சிங் என்ன சொன்னார், ஜெயபால்ரெட்டிகுறுக்கிட்டு என்ன கூறியிருப்பார், தயாநிதி மாறன் வந்து சொன்னதும் பேச்சு ஏன்நின்றது என்ற எதிர்பார்ப்பு அரசியல் தலைவர்கள் மத்தியிலும், பத்திரிக்கையாளர்கள்மனதிலும் ஓடியது.

நிகழ்ச்சியை முடித்து விட்டு வந்த அமர்சிங்கை சூழ்ந்த செய்தியாளர்கள்கருணாநிதியுடன் நடந்த பேச்சுவார்த்தை விவரத்தை நோண்டினர். அதற்குப்பதிலளித்த அமர்சிங்,

என்னைப் பார்த்ததும் மலர்ச்சியுடன் கை குலுக்கிய கருணாநிதி, எங்கள் மீதுஉங்களுக்கு என்ன வருத்தம், என்ன கோபம் என்று கேட்டார். அதற்கு நான், உங்கள்மீது கோபம் கொள்ள காரணமே இல்லையே.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உங்களுக்குத் தொடர்பு உள்ளதாக கூறி 1996ம்ஆண்டு இதே சோனியா காந்தி குற்றம் சாட்டினார். மத்திய அமைச்சரவையிலிருந்துதிமுக அமைச்சர்களை நீக்க வேண்டும் எனவும் வற்புறுத்தினார். அவ்வாறுநீக்காவிட்டால் ஆட்சிக்கு தரும் ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றும் மிரட்டினார்.

ஆனால் உங்களுக்கு அப்போது நாங்கள் தோளோடு தோள் நின்றோம். அரசேகவிழ்ந்தாலும் பரவாயில்லை என்று கூறி உங்களைத் தாங்கினோம். இப்போது அதேகாங்கிரஸுடன் அணி வகுத்து நிற்கிறீர்கள் என்றேன். அப்போது குறுக்கிட்டஜெயபால் ரெட்டி, சமாஜ்வாடி கட்சியுடன் எப்போதும் தோழமையாக இருக்கவேகாங்கிரஸ் விரும்புகிறது என்றார்.

அப்போது குறுக்கிட்ட நான், காங்கிரசுக்கு ஆதரவு தருவதற்காகத் தான் சோனியாவீட்டுக்கு நான் அழையா விருந்தாளியாக வந்தேன். ஆனால் அவர் முகம் கொடுத்துக்கூட பேசவில்லை. இதுதான் காங்கிரஸ் கட்சியின் கலாச்சாரம் என்றேன்.பேச்சு சூடாவதைப் பார்த்த தயாநிதி மாறன் குறுக்கிட்டு, இன்று ஒரு நாளாவதுஅரசியல் பேசாமல் இருக்கலாமே என்று புன்னகையுடன் கூறி சூழ்நிலையைதளர்த்தினார். இதுதான் நடந்தது என்றார் அமர்சிங்.

ஜெயலலிதா முலாயம் சிங்கை சந்தித்ததும், அதற்கு அமர்சிங் ஏற்பாடு செய்ததும்முதல்வர் கருணாநிதியை சலனப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது. அதனால்தான்அமர்சிங்கிடம் உங்களுக்கு எங்கள் மீது என்ன கோபம் என்று வெளிப்படையாகவேகேட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர். சிலை திறப்புக்கும், மாறன் சிலை திறப்புக்கும் அமர்சிங் வந்ததுபோலவே, எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி, தெலுங்கு தேச தலைவர் எர்ரான் நாயுடு,முலாயம் சிங்கின் மச்சான் ராம் கோபால் யாதவ், பாஜக எம்.பி. திருநாவுக்கரசர்ஆகியோரும் இரு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா தலைமையில் நடந்த எம்.ஜி.ஆர். சிலை திறப்பு நிகழ்ச்சியில்தமிழகத்திலிருந்து பங்கேற்ற ஒரே மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மட்டும்தான்.ஆனால் நிகழ்ச்சிக்கு வந்த அவர் அனைவருக்கும் பின்னால் நின்று வேடிக்கை பார்த்துவிட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.

ஜெயலலிதாவை அவரும் கண்டுகொள்ளவில்லை, ஜெயலலிதாவும் அவரைக்கண்டுகொள்ளவில்லை. அதேசமயம், ஜெயலலிதாவிடம் கருத்து வேறுபாடு கொண்டுகட்சியை விட்டு இருமுறை நீக்கப்பட்டு, இருமுறை தனிக் கட்சி கண்டு, இப்போதுபாஜக சார்பில் எம்.பியாக உள்ள திருநாவுக்கரசர் மட்டும் ஜெயலலிதாவுக்கு வெகுஅருகில் நின்றபடி தனது தலைவரின் சிலை திறக்கப்படுவதை கண்டு மகிழ்ந்தார்.

மாறன் சிலை திறப்பின்போது ப.சிதம்பரம் முன் வரிசையில் இருந்தார்.எல்லோரிடமும் கலகலப்பாக பேசிவிட்டே சென்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X