For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சூடான் அகதிகளுக்கு ஆஸி. நகரம் தடை

By Staff
Google Oneindia Tamil News

கான்பெரா:இனக் கலவரம் மூளும் என்ற அச்சத்தால் சூடான் நாட்டு அகதிகளை டாம்வொர்த் நகரில் குடியேற ஆஸ்திரேலியநிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது.

சூடான் நாட்டைச் சேர்ந்த 5 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் டாம்வொர்த் நகரில் தங்களைக் குடியேற அனுமதிக்கவேண்டும் என நகர நிர்வாகத்திடம் மனு செய்திருந்தனர். ஆனால் அதற்கு அனுமதி தர நகர நிர்வாகம் மறுத்துவிட்டது.

ஒரு வருடத்திற்கு முன்பு கான்பெராவிலிருந்து 260 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிட்னி கடற்கரையில், இனக்கலவரம் ஏற்பட்டது. வெள்ளையர்களுக்கும், லெபனான் நாட்டைச் சேர்ந்தவர்களும் இதில் மோதிக் கொண்டனர்.

தற்போது சூடான் நாட்டைச் சேர்ந்தவர்களை டாம்வொர்த் நகரில் தங்க வைத்தால் சிட்னியைப் போல இங்கும்கலவரம் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் டாம்வொர்த் நிர்வாகம் சூடான் அகதிகளுக்கு அனுமதி தர மறுத்துவிட்டது.

இதுகுறித்து டாம்வொர்த் நகர மேயர் ஜேம்ஸ் டிரெலர் கூறுகையில், ஆப்பிரிக்க மக்களின் கலாச்சாரவேறுபாட்டை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதை அகதிகள் விஷயத்திலும் தீவிரமாக கவனிக்கவேண்டும்.

ஏற்கனவே இங்கு 12 சூடான் நாட்டினர் தங்கியுள்ளனர். இவர்கள் மீது சூடான் நாட்டில் கற்பழிப்பு, வேகமாகவண்டி ஓட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் வழக்குகள் உள்ளன. ஆனால் அதையும் மீறி இவர்கள்டாம்வொர்த் நகரில் வந்து குடியேறி விட்டனர்.

இந்த நிலையில் மேலும் சில சூடான் நாட்டினரை அகதிகள் என்ற போர்வையில் தங்க வைக்கக் கூடாது என்றுநகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் கவலை தெரிவித்தனர். எனவேதான் 5 சூடான் குடும்பத்தினருக்குடாம்வொர்த் நகரில்தங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே டாம்வொர்த் நகரின் மக்கள் தொகை 40,000 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கலாச்சாரமாறுபாடு கொண்டவர்களை தங்க வைக்க உடன்பாடு இல்லை என்றார் அவர்.

ஆனால் டாம்வொர்த் நிர்வாகத்தின் முடிவுக்கு சில கவுன்சிலர்களும், வர்த்தக அமைப்பினரும், உள்ளூர் சர்ச்நிர்வாகிகளும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த முடிவை வாபஸ் பெற வேண்டும். சூடான் நாட்டினரை தங்கவைப்பதால் சிட்னியைப் போல இனக் கலவரம் ஏற்படும் என அஞ்சுவது தவறானது, முட்டாள்தனமானது என்றுஅவர்கள் விமர்சித்துள்ளனர்.

டாம்வொர்த் நகர வர்த்தக சங்க தலைவர் மாக் கட்சார்ச்ட் கூறுகையில், டாம்வொர்த் நகரில் கூடுதலாக 5குடும்பங்களை குடியமர்த்துவதன் மூலம் பெரிய இனக்கலவரம் ஏற்படும் என்று நகர நிர்வாகம் கூறுவதுவேடிக்கையாக உள்ளது என்றார்.

ஆஸ்திரேலியாவில் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர். பல இனத்தவர்கள் இங்குவாழ்கின்றனர். ஆஸ்திரேலிய மக்கள் தொகையில் (மொத்தம் 2 கோடி) நான்கில் ஒருவர் பிற நாட்டவர் ஆவார்.

1945ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 60 லட்சம் வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளனர்.இந்த ஆண்டு 1 லட்சத்து 44 ஆயிரம் வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் குடியேற அந்நாட்டு அரசு அனுமதிவழங்கவுள்ளது.

அதேசமயம், பிறநாட்டினராலும், பிற இனத்தவர்களாலும் ஆஸ்திரேலிய நாட்டுக் கலாச்சாரம் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, விசா பெற ஆங்கில தேர்வு எழுதுவது அவசியம் என அந்நாட்டு அரசுகட்டாயமாக்கியிருப்பது நினைவிருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X