நியூசிலாந்து-விமானத்தை கடத்த முயன்ற பெண்; விமானிகளுக்கு கத்திக் குத்து

நியூசிலாந்தின் பிளன்ஹைம் நகரிலிருந்து கிறிஸ்ட்சர்ச் நகருக்கு 19 பயணிகளுடன் ஈகிள் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் புறப்பட்டு சென்றது. நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது ஒரு பெண் எழுந்து காக்பிட் நோக்கி சென்றார்.
தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாகவும், விமானத்தை தான் சொல்லும் திசையில் செலுத்தாவிட்டால் விமானத்தை தகர்க்க போவதாகவும் அந்த பெண் விமானிகளை மிரட்டினார்.
ஆனால் மிரட்டலுக்கு விமானிகள் பணியாததால் அந்த பெண் இரு விமானிகளையும் கத்தியால் குத்தினார். இதில் தலையிலும் கழுத்திலும் விமானிகளுக்கு கத்திக் குத்து விழுந்தது. விமானிகள் அலறிய சத்தம் கேட்டு ஓடிய பயணிகள் பெண் மீது பாய்ந்து அவரை மடக்கினர்.
ரத்தம் சொட்டிய நிலையில் விமானத்தை கிறிஸ்ட்சர்ச் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறக்கினர் விமானிகள். இதையடுத்து உள்ள புகுந்த போலீசார் அந்தப் பெண்ணை கைது செய்தனர்.
கருப்பர் இனத்தைச் சேர்ந்த அந்தப் பெண் ஏன் விமானத்தை கடந்த முயன்றார் என்று விசாரணை நடக்கிறது. அவர் மன நிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பிளன்ஹைம் நகரில் உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் கத்தியுடன் அவர் விமானத்துக்குள் நுழைய முடிந்துள்ளது.
கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் நடு வானில் இந்தப் பெண்ணால் பயணிகள் பெரும் பீதியில் ஆழ்ந்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications