For Daily Alerts
Just In
சேது திட்டத்தை எதிர்ப்பதில் அதிமுக-பாஜக கூட்டாக செயல்படும்: ரவிசங்கர்
டெல்லி: ராமர் பால பிரச்சனையில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து போராடும் என பாஜக தமிழக பார்வையாளரான ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
பாஜக செய்தி தொடர்பாளருமான அவர் கூறுகையில்,
பல்வேறு பிரச்சினைகளில் பாஜக-அதிமுக இடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது. உள்ளது. நாடாளுமன்றத்தில் இரு கட்சிகளும் இணைந்து செயல்பட வாய்ப்புள்ளது.
நாடாளுமன்றத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து செயல்படும். இது தொடர்பாக பாஜக கூட்டணி தலைவர்கள் அதிமுகவுடன் பேச்சு நடத்துவர்.
குறிப்பாக ராமர் பாலம் உள்ளிட்ட பிரச்சனைகளில் அதிமுகவுடன் இணைந்து பாஜக குரல் தரும் என்றார்.