For Daily Alerts
Just In
மதுரையில் கக்கன் சிலையை உடைக்க முயன்றவர் கைது
மதுரை: மதுரையில் கக்கன் சிலையை உடைக்க முயன்றவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
மதுரையை அடுத்த மேலூர் அருகே உள்ளது செக்கடி. இங்கு மறைந்த காங்கிரஸ் தலைவர் கக்கன் சிலை உள்ளது.
இந்த சிலையின் தலைப் பகுதியை ஒருவர் கல்லால் உடைக்க முயன்று கொண்டிருப்பதை பார்த்த பொது மக்களில் சிலர் உடனே மேலூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேலூர் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அப்போது கக்கன் சிலையை சேதப்படுத்திக் கொண்டிருந்த நபரை பிடித்தனர்.
அவரிடம் விசாரணை செய்ததில், அவர் தும்பைபட்டி அருகே உள்ள பெரும்பாலைப்பட்டியை சேர்ந்த பழனி என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.