For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட் 2008: 'ஹை லைட்ஸ்'

By Staff
Google Oneindia Tamil News

பட்ஜெட் 2008-09 முக்கிய அம்சங்கள்:

-கடந்த 2 ஆண்டுகளி்ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சராசரியாக 8.8 சதவீதமாக உள்ளது.

- பண வீக்கத்தை கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை

-விவசாயத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சி 2.6 சதவீதமாகவே உள்ளது கவலை தருகிறது. அதே நேரத்தில் தானியங்கள் உற்பத்தி சாதனை அளவுக்கு அதிகரித்துள்ளது.

-தானிய உற்பத்தியில் தன்னிறைவு அடைய நடவடிக்கை

-விவசாயக் கடன் 2 ஆண்டுகளில் 2 மடங்காக உயர்வு. இந்த ஆண்டு மொத்த விவசாயக் கடன் ரூ. 2.4 லட்சம் கோடியைத் தொடும்.

-பாதுகாப்பு துறைக்கு ரூ. 1,05,000 கோடி ஒதுக்கீடு. இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகம்.
-பில்டர் சிகரெட் மீதான வரி அதிகரிக்கப்படுகிறது.

-சாப்ட்வேர் பூங்காங்களைப் பொறுத்தவரை பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. இதனால் சாப்ட்வேர் டெக்னாலஜி பார்க்குகளை பெறுத்தவரை 2009ம் ஆணடு மார்ச் 31க்கு பின் வரி விலக்குகள் (tax holiday) இருக்காது எனத் தெரிகிறது.

6,000 புதிய பள்ளிகள்:

- கல்விக்கான ஒதுக்கீடு 20 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ. 28,000 ஒதுக்கீடு. நாடு முழுவதும் அடுத்த ஆண்டில் 6,000 பள்ளிகளைக் கட்ட திட்டம்.

பிகார்-ஆந்திராவில் ஐஐடி:

-பிகார், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தானில் புதிதாக 3 ஐஐடிகள்

- நாடு முழவதும் புதிதாக 16 மத்தியப் பல்கலைக்கழங்கள் உருவாக்க திட்டம்.

-போபால, திரிபுராவில் அகில இந்திய அறிவியல் கழகங்கள் (IISc) உருவாக்கப்படும்.

-நாட்டின் பின் தங்கிய பகுதிகளில் 410 கூடுதல் கஸ்தூரிபா காந்தி வித்யாலயா பள்ளிகள் கட்டப்படும். தலித்கள் அதிகம் வசி்க்கும் நாட்டின் 20 மாவட்டங்களில் நவோதயா பள்ளிகள் உருவாக்கப்படும். இதற்காக ரூ. 130 கோடி ஒதுக்கப்படுகிறது.

-வறட்சியான பகுதிகளில் பள்ளிகளுக்கு அருகே தண்ணீர் வசதியை ஏற்படுத்த ரூ. 200 கோடியில் புதிய திட்டம்

-சுகாதாரம், நலத்துறைக்கான ஒதுக்கீடு 15 சதவீதம் அதிகரிக்கப்பட்டு ரூ. 34,400 கோடி ஒதுக்கீடு.

-ரூ. 400 கோடியில் முதியோர் நலனுக்கான தேசிய இயக்கம் தொடங்கப்படும்.

-எய்ட்ஸ் ஆராய்ச்சி, சிகிச்சை, நலப் பணிகளுக்கு ரூ. 992 கோடி ஒதுக்கீடு. எய்ட்சுக்கான மருந்தின் மீதான இறக்குமதி வரி விலக்கு.

-தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மேலும் 598 மாவட்டங்களுக்கு நீடிப்பு. இதற்காக ரூ. 16,000 கோடி ஒதுக்கீடு.

-குழந்தைகள் நலம் தொடர்பான திட்டங்களுக்கு ரூ. 33, 434 கோடி ஒதுக்கீடு.

-சிறுபான்மை நலத்துறைக்கான ஒதுக்கீடு இரு மடங்காக்கப்பட்டு ரூ. 1,000 கோடி ஒதுக்கப்படுகிறது.

-வங்கிப் பண பரிவர்த்தனைக்கு விதிக்கப்பட்ட வரி ரத்து செய்யப்படுகிறது.

வருமான வரி:

-வருடத்துக்கு ரூ. 5 லட்சத்துக்கு மேல் ஊதியம் பெறுவோருக்கு 30% வரி

-முதியோருக்கான வருமான வரி விலக்கு ரூ. 2.25 லட்சமாக உயர்வு

-ரூ. 3 முதல் 5 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு 25% வரி

-சிறிய கார்கள் விலை ரூ. 10,000 வரை குறையும்

-ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு 10% வரி

-பெண்களுக்கான வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 1.80 லட்சமாக உயர்வு

-ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் முதல் 3 லட்சம் வரை ஊதியம் பெறுவோருக்கு 10% வரி

-வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ. 1.5 லட்சமாக உயர்வு

-கார்கள், 2 சக்கர வாகனங்கள் மீதான வரி 4% குறைப்பு

-செட்-டாப் பாக்ஸ்கள் மீதான சுங்க வரி விலக்கு

-சிறிய கார்கள் மீதான கலால் வரி 12% ஆக குறைப்பு

-இரு சக்கர வாகனஙகள் மீதான கலால் வரி (excise duty) 16ல் இருந்து 12% சதவீதமாக குறைப்பு

-வயர்லெஸ் டேட்டா கார்ட் உள்ளிட்ட சில ஹார்ட்வேர் கருவிகள் மீதான கலால் வரி குறைப்பு

-சில மருந்துகள் மொத்த கொள்முதலுக்கு சுங்க வரி 5% குறைப்பு

-அதிகபட்ச சுங்க வரி விதிப்பில் மாற்றமில்லை

-புலிகளை பாதுகாக்க தனிப் படை அமைக்க ரூ. 50 கோடி

-முதலீட்டுச் சந்தையில் அனைத்து பணிகளுக்கும் பான் கார்ட் அவசியம்

-ராணுவ சைனி்க் பள்ளிகள் மேம்பாட்டுக்கு தலா ரூ. 2 கோடி

-30 புதிய ஜவுளி பூங்காங்கள்

-ஜவுளி பூங்காக்கள் அமைக்க ரூ. 450 கோடி

-மின் வினியோக கட்டமைப்பை மேம்படுத்த கூடுதல் நிதி

-கடன் தள்ளுபடியால் ஏற்படும் நஷ்டத்தை வங்கிகளுக்கு மத்திய அரசு ஈடுகட்டும்

-ரூ. 60,000 கோடி விவசாயக் கடன்கள் தள்ளுபடி

-நீர் நிலைகளை மேம்படுத்த உலக வங்கியுடன் தமிழகம், ஆந்திரம் ஒப்பந்தம்

-பெண்களுக்கான திட்டங்களுக்கு ரூ. 11,460 கோடி

-சிறுபான்மையினர் அதிகமுள்ள மாவட்டங்களில் 288 புதிய பொதுத்துறை வங்கிகள்

-சிறுபான்மையினர் அதிகமுள்ள மாவட்டங்களுக்கு ரூ. 540 கோடி

-தனியாருடன் இணைந்து சென்னை கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

-தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சிக் கழகத்துக்கு ரூ. 75 கோடி

-ராஜிவ்காந்தி குடிநீர் திட்டத்துக்கு ரூ.7,300 கோடி

-மத்திய பாராமிலிட்டரி படைகளில் அதிக சிறுபான்மையினர் சேர்க்கப்படுவர்

-சென்னை கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துக்கு ரூ. 300 கோடி

-நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்

-ஜவஹர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.6,866 கோடி

-ஊரக சுகாதார இயக்கத்துக்கான ஒதுக்கீடு 15% அதிகரிப்பு

-அங்கன்வாடி ஊழியர் ஊதியம் ரூ. 500 அதிகரிப்பு

-அங்கன்வாடி நல ஊழியர் ஊதியம் ரூ. 250 அதிகரிப்பு

-18 லட்சம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு பலன்

-பள்ளிகளி்ல் மதிய உணவுத் திட்டத்துக்கு ரூ. 8,000 கோடி

-சர்வ சிக்ஷ அபியான் கல்வி திட்டத்துக்கு ரூ. 13,100 கோடி

-பாரத் நிர்மாண் திட்டத்துக்கு ரூ. 31,281 கோடி ஒதுக்கீடு

-வெளிநாட்டு முதலீடுகள் கண்காணிக்கப்படும்

-11.4 கோடி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம் சாதனை

-பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிப்பு

-2007ல் ஆகஸ்ட் முதல் உலக சந்தைகளில் தேக்கம்

-தொடர்ந்து 8.8 சதவீத பொருளாதார வளர்ச்சி

-ப.சிதம்பரத்தின் 7வது பட்ஜெட்

-எதிர்க் கட்சிகள் அமளி

-பட்ஜெட் தாக்கலை தொடங்கினார் ப.சிதம்பரம்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X