For Quick Alerts
For Daily Alerts
Just In

லஞ்சத்தில் பங்கு-இன்ஸ்பெக்டருடன் மோதிய எஸ்ஐ மாற்றம்
மதுரை: மதுரை அருகே லஞ்சப் பணத்தைப் பங்கு போடுவதில் தகராறு செய்த சப்-இன்ஸ்பெக்டர் திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டார்.
மதுரை அருகே நாகமலை புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருப்பவர் ரகுமான். அதே காவல் நிலையத்தில் எஸ். ஐ யாக இருந்தவர் மாரிமுத்து.
இவர்கள் இருவரும், வழக்கு சம்பந்தமாக காவல் நிலையத்துக்கு வரும் நபர்களிடம் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது.
இந்த நிலையில் ஒரு வழக்கு சம்பந்தமாக இருவருக்கும் இடையே லஞ்ச பணத்தை பிரித்துக் கொள்வதில் பகிரங்கமாகத் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த விஷயம் மாவட்ட எஸ்.பி. அன்பு கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதையடுத்து எஸ்.ஐ. மாரிமுத்து பாலமேடு காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இன்ஸ்பெக்டர் ரகுராமனை வேறு பிரிவுக்கு மாற்ற உள்ளதாக கூறப்படுகிறது.
Comments
Story first published: Friday, March 14, 2008, 13:59 [IST]