டி.ஆர். விலகிய பதவியில் ரகுமான்கான் நியமனம்
சென்னை: டி.ராஜேந்தர் ராஜினாமா செய்த மாநில தேசிய சேமிப்பு ஆலோசனைக் குழு துணைத் தலைவர் பதவியில் திமுக தலைவர்களில் ஒருவரான ரகுமான் கான் நியமி்க்கப்பட்டுள்ளார்.
தேசிய அளவிலான சேமிப்புத் திட்டங்களை அந்தந்த மாநிலங்களில் அமல்படுத்த ஒவ்வொரு மாநிலத்திலும் ஆலோசனைக் குழுக்கள் உள்ளன. இந்த குழுவின் துணைத் தலைவரை அந்தந்த மாநில அரசுகளே நியமிக்கும்.
இது மாநில அமைச்சர் பதவிக்கு இணையான அந்தஸ்து கொண்ட பதவி.
இந்தப் பதவியில் இருந்த லட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர் இரு நாட்களுக்கு முன் ராஜினாமா செய்தார்.
இந்தப் பதவியில் முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தேசிய சேமிப்புத் திட்டங்களுக்கான மாநல அளவிலான ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் அ.ரகுமான்கானை முதல்வர் கருணாநிதி நியமனம் செய்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.