ஓகேனக்கல்-எடியூரப்பாவை அதிமுக கண்டிக்காதது ஏன்?
சென்னை: ஓகேனக்கல் திட்டத்தை எதிர்த்து வரும் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பாவை அதிமுக கண்டிக்காதது குறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது.
சட்டசபையில் பட்ஜெட் மீது நடந்த விவாத விவரம்:
ராஜேந்திரன் (திமுக): கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டை, உடைசல், டப்பா பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த ஆட்சியில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட புதிய பஸ்கள் விடப்பட்டுள்ளன. கடந்த ஆட்சியில் போதுமான மின் உற்பத்தி திட்டங்களை மேற்கொள்ளாததால் தான் மின் பற்றாக்குறை ஏற்பட்டது.
செங்கோட்டையன் (அதிமுக): அப்படியானால் இரண்டு ஆண்டுகளாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்.
ராஜேந்திரன்: ஓகேனக்கல் திட்டத்துக்கு எடியூரப்பாவை வைத்து இடையூறு செய்கின்றனர். இதை தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் கண்டித்தன. சில கட்சிகள் (அதிமுக) மட்டும் கண்டிக்கவில்லை.
செங்கோட்டையன்: கர்நாடகாவில் எடியூரப்பா இடையூறு செய்கிறார் என்றால் அதைத் தடுக்க வேண்டியது திமுக அரசு தான்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: எடியூரப்பா சார்ந்துள்ள பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த இல.கணேசன் கூட கண்டித்தார் என்றார்.