காதலி சாவு: விரக்தியில் காதலன் தூக்கு
நெல்லை: நெல்லை அருகே காதல் தோல்வியால் விஷமருந்தி தற்கொலை செய்த காதலிக்காக காதலனும் தூக்கு போட்டு உயிர்விட்ட பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
நெல்லை அருகே உள்ள தருவை கலைஞர் காலனியை சேர்ந்த வானமாமலை மகன் கணேசன். கொத்தனார் வேலை செய்து வந்த இவரும், புதுக்காலனியை சேர்ந்த சுப்பையா மகள் ஈஸ்வரியும் காதலித்து வந்தனர்.
இது தெரிந்து ஈஸ்வரியை கண்டித்தார் சுப்பையா. ஆனால் வாழ்ந்தால் கணேசனோடு. இல்லாவிட்டால் உயிரைவிடுவேன் என்று ஈஸ்வரி வீம்பு பிடித்தார். ஈஸ்வரியின் அக்காவுக்கு திருமணம் முடிந்தபிறகே அவருக்கு திருமணம் செய்து வைக்கமுடியும் என்று சுப்பையா சொல்லிவிட்டார்.
இதனால் மனமுடைந்த ஈஸ்வரி விஷம் குடித்தார். மயங்கி விழுந்த அவரை பாளை அரசு மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று ஈஸ்வரி இறந்தார். தகவல் அறந்த காதலன் கணேசன் ஊருக்கு வெளியே ஒரு மரத்தில் தூக்கிட்டு இறந்தார்.
காதலி இறந்த ஒரு மணிநேரத்தில் காதலனும் இறந்த பரிதாப சம்பவத்தால் தருவை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.