வெள்ளம்: கூடுலாக ரூ.75 கோடி ஒதுக்கீடு
சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ள நிவாரணப் பணிகளுக்கு கூடுதலாக ரூ. 75 கோடி நிதியை முதல்வர் கருணாநிதி ஒதுக்கியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட மத்திய குழு ஏப்ரல் 6ம் தேதி தமிழகம் வருகிறது. 9ம் தேதி முதல் அது சுற்றுப்பயணம் செய்கிறது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு மத்திய குழுவை அனுப்புகிறது.
ஏற்கனவே கடந்த மார்ச் 25ம் தேதி வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள முதல்வர் கருணாநிதி ரூ. 100 கோடி நிதியை ஒதுக்கியிருந்தார். தற்போது கூடுதலாக ரூ. 75 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிட்டுள்ளார்.
கடந்த மாதம் பெய்த எதிர்பாராத மழைக்கு 24 பேர் பலியாகியுள்ளனர். 47 ஆயிரம் ஹெக்டேர் நெல் உள்ளிட்ட பிற பயிர்கள் சேதமடைந்துள்ளன. 800 கால்நடைகள் உயிரிழந்துள்ளன.
மழையால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் முழுமையாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.