For Daily Alerts
Just In
சீனா செல்லும் சுப்பிரமணியம் சுவாமி
சென்னை: ஜனதா கட்சித் தலைவரான சுப்பிரமணியம் சுவாமி வரும் ஜூன் மாதம் சீனா செல்கிறார்.
அங்கு ஆப்ரோ-ஆசிய கழகத்தி்ல் நடக்கும் கூட்டத்தில் உலகமயமான சந்தையில் இந்தியா-சீனாவின் பங்கு என்பது குறித்து சுவாமி உரையாற்றவுள்ளார்.
ஜூன் 11 முதல் 4 நாட்கள் அவர் பெய்ஜிங்கில் சுற்றுப் பயணம் செய்வார். சி்ங்குகா, பெய்ஜிங் பல்கலைக்கழக்கங்களின் பேராசிரியர்களுடனும் அவர் கலந்துரையாட உள்ளார்.
பின்னர் ஷாங்காய் செல்லும் சுவாமி அங்குள்ள இந்திய சாப்ட்வேர் நிறுவனமான என்.ஐ.ஐ.டியின் கிளையையும் பார்வையிடுவார்.