For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தூத்துக்குடி அருகே உருவாகும் விமான தளம்

By Staff
Google Oneindia Tamil News

IAF Dornier aircraft
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் கவனிப்பின்றி கிடக்கும் விமான தளத்தை, விமானப் படைத் தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் கடந்த 1941ம் ஆண்டு முதல் ராணுவ விமான தளம் செயல்பட்டு வந்தது. இரண்டு ரன்வேக்களை கொண்ட இந்த விமான படைதளத்தின் நுழைவு வாயில் பகுதியில் இரண்டு ஆலமரங்கள் இருந்ததால் இது இரட்டை ஆலமர ஏர்போர்ட் என அழைக்கப்பட்டது.

சுதந்திரத்திற்கு பிறகு கவனிப்பாரான்றி விடப்பட்ட இந்த விமானப்படை தளம் அப்பகுதியை சேர்ந்த பலரால் ஆக்கிராமிக்கப்பட்டதால் மொத்த பரப்பான 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பில் பாதிக்கு மேல் விவசாய நிலங்களாக மாறியுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் இதனை இந்திய விமான படை உயரதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் இந்த ஏர்போர்ட்டை புதுப்பித்து மீண்டும் 2 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் விமான படை தளத்தை அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இதற்காக விமானபடை அதிகாரிகள் அங்கு பலமுறை ஹெலிகாப்டர்கள், ராணுவ சிறிய விமானங்களை தரையிறக்கி ஆய்வு செய்தனர். இதுவரை விமானப் படை அதிகாரிகள் 4 கட்டமாக ஆய்வு செய்துள்ளனர்.

நேற்று சிவில் மற்றும் விமானபடை விங் காமண்டர் சிஆர் பிரசாத், பாதுகாப்பு அமைச்சக அதிகாரி வெங்கட் நாகிரெட்டி, நிர்வாக அதிகாரி சமீர் அலி உள்ளிட்டோர் தனி ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வந்தனர்.

அவர்கள் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலைய விரிவாக்க பணியின் போது விமானப் படைக்கு நிலம் தனியாக ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது என்றும், அங்கு 61.75 ஏக்கர் பரப்பளவில் புதிய விமானபடைதளம் அமைக்கப்படுகிறது என்றும் அதற்கான இடத்தை பார்வையிட வந்ததாக தெரிவித்தனர்.

மேலும் விமானபடை அதிகாரிகள் மற்றும் கலெக்டர் பழனியாண்டி அதே ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்று கடம்பூர் இரட்டை ஆலமர ஏர்போர்ட்டை வானில் வட்டமிட்டபடியே ஆய்வு செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X