For Daily Alerts
Just In
சேலத்தில் 30ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெ.
சென்னை: மின்வெட்டு, விலைவாசி உயர்வு, பெட்ரோலியப் பொருள் தட்டுப்பாடு, காஸ் சிலிண்டர் விலையேற்றம் உள்ளிட்டவற்றைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு 30ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய, மாநில அரசுகளின் இத்தகைய மக்கள் விரோத செயல்பாடுகளால் மக்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இதைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு 30ம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.