For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களவை தொகுதி அறிமுகம்-39: கன்னியாகுமரி

By Sridhar L
Google Oneindia Tamil News

Kanniyakumari
கன்னியாகுமரி: தமிழகத்தின் பாரம்பரியம் மிக்க பகுதி கன்னியாகுமரி. சிறந்த சுற்றுலாத்தளம். இந்தியாவின் தென் கோடி பகுதி.

சுவாமி விவேகானந்தர் வந்து சென்ற பகுதி, தமிழகத்தின் எல்லையோர மாவட்டம் என பல்வேறு பெருமைகளை உடையது கன்னியாகுமரி.

தமிழகத்தில் அதிகம் படித்தவர்கள் நிறைந்த மாவட்டமாகவும் பெயர் பெற்ற குமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதி நீக்கப்பட்டு, கன்னியாகுமரியின் பெயரில் புதிய தொகுதியாக மலர்ந்துள்ளது.

இம்மாவட்டம் அமைதியான உழைப்பை நம்பி மட்டுமே வாழும் கற்றோர் நிறைந்த மாவட்டம்.

பழைய நாகர்கோவில் தொகுதியில் கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபுரம், திருவட்டாறு, விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றிருந்தன.

தற்போது புதிய கன்னியாகுமரி தொகுதியில், கன்னியாகுமரி, நாகர்கோவில், கொளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. திருவட்டாறு தொகுதி நீக்கப்பட்டு விட்டது.

நாகர்கோவில் தொகுதியில், 1951 முதல் 1991-ம் ஆண்டு வரை நடந்த 10 தேர்தல்களிலுமே காங்கிரஸ் வெற்றி பெற்றது.

96, 98 ஆகிய இரு தேர்தல்களிலும் தமாகா வென்றது. பாஜக, சிபிஎம் தலா ஒரு தடவை வெற்றி பெற்றுள்ளன.

1977 முதல் 2004 வரை அதிமுக இங்கு போட்டியிடவி்ல்லை. மேலும் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு இங்கு ஒரு தொகுதியிலும் இடம் கிடைக்கவில்லை.

மீனவ மக்கள் நிறைந்த தொகுதியான கன்னியாகுமரியில், ரப்பர் விவசாயம், அண்டி மா, சிறுதொழில் கூடங்கள், கடலை நம்பி வாழ்தல் மட்டுமே பிழைப்பாக உள்ளது. மாற்று தொழில், தொழிற்சாலைகள் என எதுவுமே இங்கு இல்லை.

வரும் பாராளுமன்ற தேர்தலில் இத்தொகுதியில் போட்டியிடும் எந்த கட்சியினாலும் ஓட்டு கேட்க சவால்களை தாண்டிதான் மீனவ கிராமங்களுக்கு செல்ல முடியும். அந்தளவுக்கு மக்கள் பிரச்சனை மலைபோல் குவிந்துள்ளது.

இந்தத் தொகுதியை காங்கிரஸுக்குக் கொடுக்காமல் தானே போட்டியிட திமுக மும்முரமாக உள்ளது. இதை சமீபத்தில் மு.க.அழகிரியும் நாகர்கோவில் வந்திருந்தபோது வலியுறுத்தி விட்டுச் சென்றார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடவுள்ளார். இருவரும் இப்போதே பிரசாரத்தை தொடங்கி விட்டனர்.

கடந்த தேர்தல் நிலவரம்

பெல்லார்மின் (சிபிஎம்) 4,10,091
பொன்.ராதாகிருஷ்ணன் (பாஜக) 2,45,797
வெற்றி வித்தியாசம் - 1,65,294 வாக்குகள்

இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள்

1951 - ஏ.நேசமணி (டிடிசி)
1957 - தானுலிங்கம் நாடார் (காங்)
1962 - ஏ.நேசமணி (காங்)
1967 - ஏ.நேசமணி (காங்)
1971 - காமராஜ் நாடார் (ஸ்தாபன காங்)
1977 - குமரி ஆனந்தன் (ஸ்தாபன காங்)
1980 - என். டென்னிஸ் (காங்)
1984 - என். டென்னிஸ் (காங்)
1989 - என். டென்னிஸ் (காங்)
1991 - என். டென்னிஸ் (காங்)
1996 - என். டென்னிஸ் (தமாகா)
1998 - என். டென்னிஸ் (தமாகா)
1999 - பொன். ராதாகிருஷ்ணன் (பாஜக)
2004 - ஏ.வி. பெல்லார்மின் (சிபிஎம்)

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X