For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆக. 31-ல் பார்தி-எம்டிஎன் இறுதிச் சுற்றுப் பேச்சு!

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: உலகின் மூன்றாவது பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான எம்டிஎன்னுடன் மீண்டும் இணைப்பு பற்றிய பேச்சுக்களைத் துவங்கியுள்ளது இந்தியாவின் முன்னணி தனியார் தொலைபேசி நிறுவனம் பார்தி ஏர்டெல்.

வருகிற ஆகஸ்ட் 31-ம் தேதி இதுகுறித்த இறுதிச் சுற்றுப் பேச்சுகள் நடைபெறுகின்றன.

இந்த இணைப்பு மட்டும் சாத்தியமானால், இந்தியா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள 200 மில்லியன் வாடிக்கையர்கள் பார்தி -எம்டிஎன் நிறுவனத்துக்குக் கிடைப்பார்கள்.

ஏற்கெனவே இந்த இரு நிறுவனங்களும் இணைப்பு குறித்துப் பேசிவந்தன. ஆனால் அது வெற்றி பெறவில்லை. எம்டிஎன் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனம் இணைய முயன்றது. அதுவும் முகேஷ் - அனில் அம்பானிகள் சண்டையால் முறிந்துபோனது.

பார்தி ஏர்டெல்லுடன் பின்வரும் ஒப்பந்த அடிப்படையில் எம்டிஎன் இணையக்கூடும்.

பார்தி நிறுவனம் தனது 36 சதவிகித பங்குகளை எம்டிஎன்னுக்குக் கொடுத்து, அதன் 49 சதவிகித பங்குகளைப் பெறும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X