For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிர்வாகிகள் சம்பளத்தைக் குறைக்கிறது பிபிசி!

Google Oneindia Tamil News

Top BBC earners may face salary cut
லண்டன்: பிபிசி நிறுவனம் அதிக சம்பளம் பெறும் தனது முதல் நிலை ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பை அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது.

முதல் கட்டமாக, 100 மூத்த, அதிக சம்பளம் பெறும் நிர்வாகிகள், பணியாளர்களின் சம்பளத்தில் கைவைக்கப் போகிறதாம்.

இந்த 100 பேர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகளின் சம்பளம் இங்கிலாந்து பிரதமரின் சம்பளத்தைவிட அதிகமாம். இந்தப் பட்டியலில் உள்ள ஊழியர்கள் ஆண்டுக்கு 199316 பவுண்டுகள் பெறுகிறார்களாம். போனல் மற்றும் இதர வசதிகள் இதில் சேர்க்கப்படவில்லை. அவற்றையும் சேர்த்தால் இன்னும் 30000 பவுண்டுகள் கூடிவிடும். ஆனால் இங்கிலாந்து பிரதமருக்கு தரப்படும் மொத்த சம்பளமே 194250 பவுண்டுகள்தான்.

பிபிசியின் டைரக்டர் ஜெனரல் மார்க் தாம்சனுக்கு இதை விட பல மடங்கு அதிக சம்பளம். அவர் பெறுவது 834000 பவுண்டுகள் (அப்படியே 77 ஆல் பெருக்கிக் கொள்ளுங்கள்... எவ்வளவு ரூபாய் என்று தெரிந்துவிடும்!)

இப்படியொரு நிலை தோன்றுவதற்கே பிபிசி செய்த ஒரு செயல்தான் காரணம் என்கிறார்கள்.

தனது ஊழியர்களின் சம்பள விவரங்களை பிபிசியே சமீபத்தில் வெளியிட்டு, அனைத்து மட்டத்தில் வெளிப்படையான தன்மை வேண்டும் என வற்புறுத்தியது. தங்கள் டாப் நிர்வாகிகள் உணவுக்காக செலவிடப்படும் தொகையைக் கூட பிபிசி வெளியிட்டிருந்தது.

இப்போது அதுதான் அந்த நிறுவனத்துக்கே சோதனையாகிவிட்டது. இவ்வளவு சம்பளம் எதற்காக இவர்களுக்குத் தரப்படுகிறது, எதற்காக இவ்வளவு வெட்டி செலவு, இந்த செலவு மக்களின் தலையில்தானே லைசென்ஸ் கட்டணமாக விழுகிறது என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப, இப்போது சம்பளக் குறைப்பு அறிவிப்பைச் செய்துள்ளது.

அடுத்த மூன்றாண்டுகளுக்குள் படிப்படியாக இந்த சம்பளக் குறைப்பை அமல்படுத்திவிடுவார்களாம் பிபிசி நிறுவனத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X