For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நதிகள் இணைப்பு திட்டத்தில் மண்ணைப் போட்ட ராகுல்-கேரளா!

By Staff
Google Oneindia Tamil News

Ramadoss
சென்னை: காங்​கி​ரஸ் பொதுச் செய​லா​ளர் ராகுல் காந்​தி கார​ண​மா​கவே கங்கை-​காவிரி நதி​களை இணைக்​கும் தேசிய திட்​டம் கைவி​டப்​பட்டுள்ளது என்று பாமக நிறு​வ​னர் டாக்டர் ராம​தாஸ் குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இதன்மூலம் நாம் கண்ட கனவெல்லாம் கானல் நீராக போய்விட்டது என்றும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

அவர் வெளி​யிட்டுள்ள அறிக்கை:​

இந்தியாவில் தண்ணீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமானால், நாட்டில் உள்ள தேசிய நதிகளை இணைக்க வேண்டும் என்று 2002ம் ஆண்டு சுதந்திர நாளன்று ஜனாதிபதி அப்துல் கலாம் வலியுறுத்தினார்.

இந்திராகாந்தி முதல் இப்போது மன்மோகன் சிங் காலம் வரையில் அனைத்து பிரதமர்களும் இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்து வந்திருக்கிறார்கள்.

கடலில் கலக்கும் 70% நீர்:

இதை நிறைவேற்றினால் பல பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுவிடும்; நாடு வளம் பெறும். நாட்டில் ஒரு பக்கம் வறட்சி, மறுபக்கம் வெள்ளம் என்ற நிலை தான் உள்ளது.

ந​மது நாட்​டில் மொத்த நீர் வளத்​தில் 30 சத​வீ​தம்​தான் பயன்​ப​டுத்​தப்​பட்டு வரு​கி​றது. மீதி 70 சத​வீத நீர் கட​லில் கலந்து வீணா​கி​றது. இதைத் தடுப்​ப​தற்கு நதி​கள் இணைப்​புத் திட்​டம் பயன்​ப​டும்.

ந​தி​கள் இணைப்​புத் திட்​டம் நிறை​வேற்​றப்​பட்​டால் புதி​தாக 3 கோடியே 40 லட்​சம் ஹெக்​டர் நிலம் பாசன வசதி பெறும்.

வழி​யெங்​கும் நூற்​றுக்​கும் மேற்​பட்ட மாவட்​டங்​கள் மற்​றும் 5 பெரு​ந​க​ரங்​கள் உள்​ளிட்ட நூற்​றுக்​கும் மேற்​பட்ட நக​ரங்​க​ளின் குடி​நீர் பிரச்​சனை​யைத் தீர்க்க முடி​யும்.

ஆண்டுக்கு 34 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கூடுதலாக உற்பத்தி செய்யலாம். அத்துடன் 3 கோடியே 70 லட்சம் மனித ஆண்டுகள் அளவுள்ள வேலைவாய்ப்பு புதிதாக உருவாக்கப்படும் என்றெல்லாம் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அவசியத்தை உணர்ந்துதான் வாஜ்பாய் தலைமையில் அமைந்திருந்த அரசு, நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து, ஒரு உயர்நிலை செயல்திட்டக் குழுவை நியமித்தது. அந்தக் குழுவினரும் நதிகள் இணைப்புக்கான ஆரம்பக்கட்ட பணிகளை அவசரமாக தொடங்கினார்கள்.

நினைத்ததை சாதித்த கேரளா:

முக்கியத்துவம் வாய்ந்த இந்த திட்டத்திற்கு தொடர்ந்து கேரள மாநிலம் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்து வந்திருக்கிறது. அந்த மாநிலத்தில் எந்த தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இத்திட்டத்தை எதிர்த்தே வந்திருக்கிறார்கள். அண்மைக்காலமாக எந்தவொரு பிரச்சனையிலும் நினைத்ததை சாதித்துக் கொள்ளும் கேரளா, இப்போது நதிகள் இணைப்புத் திட்ட எதிர்ப்பிலும் நினைத்ததை சாதித்துக் கொண்டிருக்கிறது.

கங்​கை​யை​யும் காவி​ரி​யை​யும் இணைக்​கும் தேசிய திட்​டத்தை நிறை​வேற்ற பெரு​ம​ளவு நிதி தேவைப்​ப​டும் என்​ப​தால் இந்​தத் திட்​டம் கைவி​டப்​ப​டு​வ​தாக நாடா​ளு​மன்​றத்​தில் அமைச்​சர் பவன்​கு​மார் பன்​சால் அறி​வித்​தி​ருக்​கி​றார்.

மண்ணைப் போட்ட ராகுல்:

அண்​மை​யில் சென்னை வந்த காங்​கி​ரஸ் கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் ராகுல்​காந்தி,​ தேசிய அள​வில் நதி​களை இணைக்​கும் திட்​டத்தை தான் ஆத​ரிக்​க​வில்லை என்​றும்,​ இந்​தத்

திட்​டத்​தினால் சாத​கங்​களை விட பாத​கங்​களே அதி​கம் என்​றும் அறி​வித்​து​விட்டு சென்​றார்.

அவ​ரது இந்த நிலைப்​பாட்​டின் கார​ண​மா​கவே கங்​கை​யை​யும்,​ காவி​ரி​யை​யும் இணைக்​கும் தேசி​யத் திட்​டம் கைவி​டப்​பட்​டி​ருக்கி​​றது என்​ப​து​தான் உண்மை.

கா​வி​ரி​யும் வைகை​யும் பாயும் தமி​ழ​கம் இன்​னும் 25 ஆண்​டு​க​ளில் பாலை​வ​ன​மாக மாறும் ஆபத்து உள்​ள​தாக நீரி​யல் நிபு​ணர்​கள் அபா​யக் கொடி காட்​டி​யுள்​ள​னர். அப்படிப்பட்ட ஆபத்தை எதிர்நோக்கியுள்ள தமிழகம், கங்கையும் காவிரியும் இணைக்கப்பட்டால் பயன்பெறும்; என்று நாம் கண்ட கனவெல்லாம் இன்றைக்கு பெரும் கானல்நீராக போய்விட்டது.

இப்போது கங்​கை​யை​யும்,​ காவி​ரி​யை​யும் இணைப்​ப​தற்​குப் பதி​லாக வடக்​கில் இம​ய​ம​லை​யில் உற்​பத்​தி​யா​கும் நதி​கள் மற்​றும் அவற்​றின் கிளை நதி​கள் ஆகி​ய​வற்றை இணைக்​கும் திட்​டம் தனி​யா​க​வும்,​ தென்​னிந்​திய தீப​கற்​பத்​தில் உரு​வா​கும் நதி​களை இணைக்​கும் திட்​டம் தனி​யா​க​வும் மேற்​கொள்​ளப்​ப​டும் என்று அமைச்​சர் பன்​சால் அறி​வித்​தி​ருக்​கி​றார்.

இந்​தத் திட்​ட​மும் நிறை​வேற்​றப்​ப​டும் என்​ப​தற்கு என்ன உத்​த​ர​வா​தம்?​.

தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று அடம் பிடித்துவரும் கேரளாவை இதற்கு எப்படி சம்மதிக்கவைக்க போகிறீர்கள்?.

தீபகற்ப நதிகளை இணைப்போம் என்பது உண்மையானால், முதலில் நாட்டில் உள்ள அனைத்து பெரிய நதிகளையும் நாட்டுடமையாக்க மத்திய அரசு முன்வர வேண்டும். நதிகளை எல்லாம் தேசிய சொத்து என்று அறிவிக்க வேண்டும். இப்படி செய்யாமல், தீபகற்ப நதிகளை இணைப்போம் என்று பேசுவதும், மக்களை இன்னும் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஏமாற்றுகின்ற செயலாகவே இருக்கும் என்று கூறி​யுள்​ளார் ராம​தாஸ்.

திட்டம் கைவிடப்படவில்லை-அமைச்சர்:

இந் நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் பன்சால் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நதிகள் இணைப்பு திட்டம் கைவிடப்படவில்லை. நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் நான் அவ்வாறு கூறவில்லை. நதிகள் இணைப்பு திட்டத்தை நிறைவேற்றும் போது ஏற்படும் சுற்றுப்புற பாதிப்பு பற்றி மாநில அரசுகளின் கருத்து கேட்கப்படும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குறைந்தபட்ச செயல் திட்டத்தில், நதிகள் இணைப்பு பற்றி குறிப்பிட்டு இருக்கிறோம். இதற்காக ரூ.4.4 லட்சம் கோடி செலவில் 5 திட்டங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. முதல் கட்டமாக தெற்கு நோக்கி பாயும் நதிகள் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

இவர் நாடாளுமன்றத்தில் சொன்னதை நம்புவதா அல்லது அறிக்கையில் சொல்வதை நம்புவதா என்று தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X