For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சோயப் மாலிக் ஒரு பெண் பித்தர், மோசடிப் பேர்வழி – ஆயிஷா தாயார் பரபரப்புப் புகார்

By Staff
Google Oneindia Tamil News

Ayisha Siddiqui
கராச்சி: சோயப் மாலிக் ஒரு மோசடிப் பேர்வழி. இந்த நிமிடம் ஒரு பெண்ணுடன் இருப்பார், அடுத்த நிமிடம் இன்னொரு பெண்ணுடன் இருப்பார் என்று பரபரப்புப் புகார் கூறியுள்ளார் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஆயிஷாவின் தாயார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அகமது சித்திக்கி. இவரது மகள் ஆயிஷா சித்திக்கி. பாகிஸ்தான் கிரிக்கெட் வீர்ர் சோயப் மாலிக்குக்கும், ஆயிஷாவுக்கும் திருமணம் நடந்த்தாக அகமது கூறி வருகிறார். ஆனால் இதை சோயப் மாலிக் தரப்பு தொடர்ந்து மறுத்து வருகிறது.

திருமணச் சான்றிதழை வெளியிட்டார்

இந்த நிலையில் நேற்று ஆயிஷாவுக்கும், சோயப் மாலிக்குக்கும் இடையே நடந்த திருமணம் தொடர்பான திருமணச் சான்றிதழை அகமது வெளியிட்டுள்ளதாக பாகிஸ்தான் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதனால் புதுத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த திருமணச் சான்றிதழில் 2002ம் ஆண்டு ஜூன் 3ம் தேதி கல்யாணம் நடந்த்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்தை ஹபீஸ் முகம்மது காலித் என்பவர் நடத்தி வைத்த்தாக தகவல் உள்ளது. திருமணப் பதிவாளர் பெயராக நசீர் உசேன் என்பவர் கையெழுத்திட்டுள்ளார்.

இருப்பினும் இந்த சான்றிதழில் திருமணப் பதிவு எண் இல்லை. அதேபோல கையெழுத்திட்டவர்களின் கையெழுத்துக்கு அருகே தேதிகளும் இல்லை.

மணமகன் என்ற இடத்தில் சோயப் மாலிக்கின் கையெழுத்தும், மணமகள் என்ற இடத்தில் மஹா சித்திக்கி என்ற பெயரில் கையெழுத்தும் இடம் பெற்றுள்ளது. மஹா சித்திக்கி என்பது ஆயிஷாவின் அதிகாரப்பூர்வ பெயர் என்று அகமது தெரிவித்துள்ளார்.

இந்தத் திருமணச் சான்றிதழ் குறித்து பாகிஸ்தானைச் சேர்ந்த துனியா என்ற தொலைக்காட்சிக்கு ஆயிஷா அளித்துள்ள பேட்டியில், சோயப்பும், அவரது குடும்பத்தினரும் திருமணமே நடக்கவில்லை என்று தொடர்ந்து கூறி வருவதால் இந்த சான்றிதழை வெளியிட நேரிட்டது.

திரும்ணச் சான்றிதழில் சாட்சிக் கையெழுத்துக்களும் கூட உள்ளன. மேலும் இதன் நகலை எனக்கு அனுப்பி வைத்த சோயப் மாலிக் அதில் கையெழுத்துப் போட்டுத் திருப்பி அனுப்புமாறு கூறியிருந்தார். அத்துடன் மஹர் பணமாக பாகிஸ்தானின் 500 ரூபாய்களையும் உடன் அனுப்பியிருந்தார்.

எனது பருமனான உடலால் சோயப் எப்போதுமே சோகத்துடன் இருந்தார். அவருக்கு ஏற்றார் போல மாற வேண்டும் என்பதற்காக நான் டெல்லியில் அறுவைச் சிகிச்சை கூட மேற்கொண்டேன். ஆனால் என்னிடம் அவர் பாரமுகமாகவே நடந்து கொண்டார். இப்போது கல்யாணமே நடக்கவில்லை என்று மறுக்கிறார்.

சானியாவுக்கும் எனக்கும் எந்த விரோதமும் இல்லை. ஆனால் உண்மை வெளியே வர வேண்டும்.

எதையும் செய்து விட்டு சுதந்திரமாக சுற்ற ஆண்களால் மட்டுமே முடியும். ஆனால் பெண்களால் அப்படி முடியாது. சோயப்பின் குடும்பத்தினர் இத்தனை ஆண்டுகளாக எங்களை அவமானப்படுத்தி வருகின்றனர். நாங்கள் சமர்ப்பிக்கும் அனைத்து ஆதாரங்களும் போலியானவை என்று கூறி வருகின்றனர். இதுபோன்ற முக்கியமான ஆவணங்களை எப்படி போலியாக தர முடியும். மீடியாக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறதே.

திருமணமாகி செட்டிலாக முடிவு செய்தபோது எனது உடல் பருமனைக் காரணம் காட்டி பிரச்சினை கொடுக்க ஆரம்பித்தார் சோயப்.

21 வயதில் ஒருவருக்கு வாக்களிக்க உரிமை உள்ளது. யாரை திருமணம் செய்யலாம் என்று முடிவு செய்வதற்கு ஒரு ஆணுக்கு உரிமை உள்ளது. அந்த முடிவை எடுக்கக் கூடிய சுதந்திரம் சோயப்புக்கு உள்ளது. ஆனால், அனைவரையும் முட்டாளாக்க முயல்கிறார் சோயப் என்றார் ஆயிஷா.

ஆயிஷாவின் தாயார் கூறுகையில், அவர் ஒரு பிரபலம், உலகம் அறிந்த ஒரு கிரிக்கெட் வீரர். எங்களது வீட்டில் நான்கு முறை வந்து தங்கியுள்ளார். அப்படி இருக்கையில், திருமணம் நடக்கவில்லை என்று எப்படி அவர் மனசாட்சி இல்லாமல் கூறுகிறார்.

எனது மகள் சந்தோஷமாக இருக்க வேண்டும். மற்றவர்களைப் போல அவரும் சுதந்திரமாக நடமாட வேண்டும். ஆனால் அந்த அசிங்கமான மனிதரால் இப்போது அவள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறாள்.

சோயப் மாலிக் ஒரு மோசடிப் பேர்வழி. எங்களது மகளுக்கு உடனடியாக தேவை விவாகரத்துதான். அந்த மோசடிப் பேர்வழியுடன் எதற்கு எனது மகள் வாழ வேண்டும். நிமிடத்திற்கு நிமிடம் பெண்ணை மாற்றும் மோசடிப் பேர்வழி சோயப் மாலிக். அவருடன் எத்தனை பெண்கள் இருக்கிறார்கள் என்று யாருக்குத் தெரியும். அந்த மனிதருடன் எனது மகள் வாழவே வேண்டாம். விவாகரத்தை மட்டும் கொடுத்தால் போதும் என்றார் ஆவேசமாக.

சோயப் குடும்பத்துக்கு அவதூறு நோட்டீஸ்

இதற்கிடையே, ஆயிஷாவின் குடும்பத்தினர் சார்பில் சோயப் மாலிக், அவருடைய மைத்துனர் இம்ரான் ஆகியோருக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து சோயப்பின் குடும்ப வக்கீலான ரமேஷ் குப்தா கூறுகையில், இதுவரை எங்களுக்கு நோட்டீஸ் வரவில்லை. வந்தவுடன் அதில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதைப் பார்த்து அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம் என்றார்.

திருமணச் சான்றிதழ் போலி – சோயப் மைத்துனர்

இதற்கிடையே, இந்த திருமணச் சான்றிதழ் போலியானது. கல்யாணமே நடக்கவில்லை என்கிறபோது எப்படி திருமணச் சான்றிதழ் மட்டும் வரும் என்று கூறியுள்ளார் சோயப் மாலிக்கின் மைத்துனரான இம்ரான் சபர் மாலிக்.

மேலும் அவர் கூறுகையில், ஆயிஷா நல்ல திறமையான, புத்திசாலியான பெண். ஆனால் அவரை சிலர் தவறாக வழி நடத்துகிறார்கள் என்றார் இம்ரான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X