For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செம்மொழி மாநாடு: ஒரே மேடையில் கருணாநிதி-ராமதாஸ்

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi and Ramdoss
சென்னை: கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ள சிறப்புக் கருத்தரங்கில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசவுள்ளார்.

திமுகவும் பாமகவுக்கு கூட்டணி சேருவதற்கு பரஸ்பரம் நிபந்தனைகளைப் போட்டுக் கொண்டு பேச்சுவார்த்தையை தொடர்ந்து கொண்டுள்ளன. அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்றத் தேர்தல் வரையிலும் இந்த 'கூட்டணி பேச்சுவார்த்தை' நடந்தாலும் ஆச்சரியமில்லை.

திமுக-பாமக இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில் கருணாநிதியும், ராமதாசும் ஒரே மேடையில் பேசவுள்ளனர்.

கோவை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு வரும் 23ம் தேதி தொடங்குகிறது.

25ம் தேதி 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். இந்தக் கருத்தரங்கில் பல்வேறு கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டு பேசுகின்றனர். அதில், பாமக நிறுவனர் ராமதாசும் ஒருவர்.

மேலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரான சீதாராம் யெச்சூரி, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரும் பேசுகின்றனர்.

20ம் தேதி முதல் உள்ளூர் சிறப்பு சுற்றுலா:

இந் நிலையில் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு கோவையைச் சுற்றியுள்ள முக்கிய இடங்களுக்கு உள்ளூர் சிறப்பு சுற்றுலா பயணத் திட்டம் ஜூன் 20ம் தேதி தொடங்கப்படுகிறது.

சுற்றுலா-1: கோவையில் இருந்து புறப்பட்டு, கோவை குற்றாலம், காருண்யா பல்கலைக்கழகம், மதிய உணவு (ஹோட்டல் தமிழ்நாடு) ஈஷா யோகா மையம், மருதமலை சென்று கோவைக்கு மீண்டும் திரும்புதல். கட்டணம் தலா ரூ. 650.

சுற்றுலா-2: கோவையில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம், கல்லார், மதிய உணவுக்குப் பின் உதகையி நகரைச் சுற்றிப் பார்த்த பின் கோவை திரும்புதல். மதிய உணவு வழங்கப்படாது. கட்டணம் தலா ரூ. 800.

சுற்றுலா- 3: கோவை, பொள்ளாச்சி, டாப் ஸ்லிப்,கோவை திரும்புதல். கட்டணம் தலா ரூ. 800.

சுற்றுலா- 4: கோவை, காரமடை (சுற்றுச்சூழல் சுற்றுலா), கோவை திரும்புதல். கட்டணம் தலா ரூ. 800.

சுற்றுலா- 5: கோவையில் இருந்து புறப்பட்டு, மேட்டுப்பாளையம், கல்லார், பைகாரா, முதுமலை, உதகையில் இரவு தங்குதல். மறுநாள் காலை உதகையைச் சுற்றிப் பார்த்த பின் குன்னூர், சிம்ஸ் பார்க், கோவைக்கு திரும்புதல். 2 நாள் சுற்றுலா, 5 வேளை உணவு உள்ளிட்ட கட்டணம் தலா ரூ. 2,000.

'ஹாப் ஆன்- ஹாப் ஆப்' சுற்றுலா: கொடிசியா அரங்கு, ஸ்ரீசாரதாம்பாள் கோவில், ஸ்ரீகோணியம்மன் கோவில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தாவரவியல் பூங்கா,மருதமலை, பேரூர் சிவன் கோவில், கோவை திரும்புதல். தினமும் காலை 9, 10, 11 மணிக்கு இந்த சுற்றுலா புறப்படும். கட்டணம் தலா ரூ. 250.

அனைத்து சுற்றுலா பயணங்களும் ஜூன் 20ம் தேதி முதல் தொடங்கும். முன்பதிவு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகத்துக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 0422- 2303176.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X