For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டீசல் விலை உயர்வு: லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக் ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: டீஸல் விலை உயர்வை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் ஸ்ட்ரைக்கில் குதிக்கத் திட்டமிட்டுள்ளனர்.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 3.50-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ 2-ம், மண்ணெண்ணை விலை லிட்டருக்கு 3 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இது லாரி உரிமையாளர்ளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுகுமார் கூறியதாவது:

ஏற்கனவே பெட்ரோல்- டீசல் விலை உயர்வால் லாரி உரிமையாளர்கள் பெரும் நஷ்டத்தில் உள்ளனர். இந்த நிலையில் சுங்க சாவடியில் இஷ்டத்துக்கு வசூலிப்பதால் லாரி அதிபர்களுக்கு கடுமையான பண விரயம் ஆகிறது.

இது போதாது என்று இப்போது பெட்ரோல்- டீசல் விலை மேலும் உயர்ந்துள்ளது. இதனால் லாரி வாடகையை உயர்த்துவதா? அல்லது பழைய வாடகையில் லாரிகளை இயக்குவதா? என்பது பற்றி ஆலோசிக்க உள்ளோம்.

இதற்காக டெல்லியில் 2-ந்தேதி அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா தலைமையில் ஆலோசனை நடத்தி போராட்டம் குறித்து முடிவு அறிவிப்போம்.

ஏற்கனவே நாங்கள் ஆகஸ்டு 2-ந்தேதி சுங்கசாவடி வசூலை ஒழுங்குபடுத்த வலியுறுத்தி போராட்டம் அறிவித்துள்ளோம்.

தற்போது பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க கோரி வருகிற 12-ந்தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். இதில் சண்முகப்பா தலைமையில் தென் மாநில லாரி அதிபர்கள் பலர் பங்கேற்க உள்ளனர். நிலைமை சாதகமாக இல்லாத பட்சத்தில் ஸ்ட்ரைக் பற்றி ஆலோசனை நடத்தவுள்ளோம்..." என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X