For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சர்தாரியின் சீன பயணத்தின்போது பாக்.-சீனா அணு சக்தி ஒப்பந்தம்

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியின் சீனா பயணத்தின் போது சீனா-பாகிஸ்தான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அடுத்த மாதம் 6-ந்தேதி பெய்ஜிங் செல்லவிருக்கிறார். இது அவர் கடந்த 2008-ம் ஆண்டு அதிபராக பொறுப்பேற்றபின் சீனாவுக்கு மேற்கொள்ளும் 5வது பயணமாகும்.

அப்போது அவர் சீன அதிபர் ஹுஜிந்தாவோ, பிரதமர் வென்ஜியா போ ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

அந்த சந்திப்பின்போது, பாகிஸ்தான்-சீனா இடையேயான அணு சக்தி வளர்ச்சி குறித்தும், அது தொடர்பான ஒத்துழைப்பை பலப்படுத்துவது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. உலக நாடுகளின் அதிருப்திக்கு இடையில் பாகிஸ்தானுக்கு சீனா மேலும் 2 அணு உலைகளை விற்பனை செய்கிறது. அது குறித்தும் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.

இந்த பயணத்தின்போது சீனா-பாகிஸ்தான் இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்வும் எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X