For Daily Alerts
தேசிய பாதுகாப்பு சட்ட முறையீட்டு தீர்ப்பாயம் முன் நாளை சீமான் ஆஜர்
சென்னை: தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ள நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான், அந்த தீர்ப்பாயம் முன்பு நாளை ஆஜராகிறார்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சீமான் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த தீர்ப்பாயம் முன்பு நாளை அவர் ஆஜராகி தான் கைது செய்யப்பட்டது தவறு என்று வாதிடவுள்ளார்.
சென்னை சிங்காரவேலர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) உள்ள தேசியப் பாதுகாப்பு அறிவுரைத் தீர்ப்பாயத்தில் நாளை பிற்பகல் 12மணிக்கு சீமான் ஆஜராகவுள்ளார். அவரது தரப்பு வாதங்களை தியாகு எடுத்துவைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.