For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

18 ஆண்டுகளுக்குப் பின் பெருவெள்ளம்-கொழும்பில் 3 லட்சம் பேர் தவிப்பு!

Google Oneindia Tamil News

கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று முன் தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. 3 லட்சம் பேர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பொதுமக்கள் குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்தது. எனவே வீடுகளை விட்டு மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மழை வெள்ளத்தால் சுமார் 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிப்பதாக இலங்கை ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் 12 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனாராம்.

கொழும்பில் உள்ள பாராளுமன்ற கட்டிடத்திற்குள்ளும் வெள்ளம் புகுந்துள்ளது. அங்கு சுமார் 1 மீட்டர் உயரத்துக்கு தண்ணீர் புகுந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து அவசரமாக கூட்டப்பட்ட கூட்டத்தில் பங்கேற்க எம்.பி.க்கள் கடற்படை படகுகளில் அழைத்து வரப்பட்டனர்.

கொழும்பில் கடந்த 1992-ம் ஆண்டு இது போன்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அப்போது 440 மில்லி மீட்டர் மழை கொட்டியது. ஆனால் நேற்று வியாழக்கிழமை அதையும் மிஞ்சும் வகையில் 493 மில்லி மீட்டர் மழை கொட்டியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X