For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு: எம்பி-எம்எல்ஏக்களுடன் காங் ஐவர் குழு ஆலோசனை

By Chakra
Google Oneindia Tamil News

GK Vasan
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்து காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்களுடன் காங்கிரஸ் ஐவர் குழு இன்று ஆலோசனை நடத்துகிறது. இதையடுத்து நாளை மாவட்டத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு செய்யவும், காங்கிரசுக்கான தொகுதிகளைத் தேர்வு செய்யவும் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், வாசன், செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன், மாநில தலைவர் கே.வி.தங்கபாலு, நாமக்கல் எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட ஐவர் குழுவை அக் கட்சி அறிவித்தது.

இதில் தனக்கு வாய்ப்பு தரப்படாததைக் கண்டித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் கலாட்டா செய்து வருகிறார்.

இந் நிலையில் ஐவர் குழுவினர் காங்கிரஸ் கட்சிக்கு பலமுள்ள தொகுதிகள் குறித்து இன்று எம்பி, எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்துகிறது.

இக் கூட்டத்தில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

நாளை மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள், காங்கிரஸ் துணை அமைப்புகளான இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், மகளிர் காங்கிரஸ், சேவாதளம், சிறுபான்மை பிரிவு, பிற்படுத்தப்பட்டோர் பிரிவு ஆகியவற்றின் நிர்வாகிகளுடனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் உறுப்பினர்கள், மேயர்கள், துணை மேயர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர்கள் ஆகியோருடனும் ஆலோசனை நடத்தப்படவுள்ளது.

இதில் பங்கேற்கும் இளங்கோவனின் ஆதரவாளர்கள் பிரச்சனை கிளப்பலாம் என்று தெரிகிறது.

English summary
The five member team which includes Union Home Minister P. Chidambaram, Union Shipping Minister G.K. Vasan and Rajya Sabha MP and Congress national spokesperson Jayanthi Natarajan today held discussions with congress MPs and MLAs about seat sharing with DMK for the Assembly elections due in May this year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X