போபால் விஷ வாயு வழக்கை மீண்டும் விசாரிக்க அனுமதிக்க முடியாது-சுப்ரீம் கோர்ட்

இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பில், கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் தாமதமாக மறு விசாரணை கோரும் மனுவைத் தாக்கல் செய்துள்ளது சிபிஐ. இதற்கு என்ன காரணம் என்பதை சிபிஐயும், மத்தியப் பிரதேச அரசும் தெளிவாக விளக்கவில்லை.
முன்பே அவர்கள் மனு தாக்கல் செய்திருக்க வேண்டும். இந்த தாமதத்தை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்த உத்தரவின் மூலம் போபால் விஷ வாயு சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அதிக அளவிலான நிவாரண நிதி கிடைப்பது பெரும் கேள்விக்குறியாகி விட்டது.
1984ம் ஆண்டு போபால் நகரில் யூனியன் கார்பைடு ஆலையிலிருந்து பரவிய விஷ வாயுவால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து யூனியன் கார்பைடு நிறுவன தலைவர் வாரன் ஆண்டர்சன், மத்திய, மாநில அரசுகளின் பாதுகாப்போடு அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டார்.
மேலும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடையும் தரவில்லைய யூனியன் கார்பைடு. இந்த நிலையில் இவ்வழக்கில் 1996ம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பை வெளியிட்டது. அதில் வாரன் ஆண்டர்சன் உள்ளிட்டோர் மீதான கடுமையான குற்றச்சாட்டை நீக்கியது உச்சநீதிமன்றம்.
இந்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்யத்தான் இப்போது சிபிஐ மனு தாக்கல் செய்திருந்தது. இதைத்தான் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுட்டிக் காட்டி, இத்தனை காலம் சிபிஐ என்ன செய்து கொண்டிருந்தது என்று காட்டமாக கேட்டுள்ளனர்.
மேலும், இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போபால் கோர்ட் பிறப்பித்த தீர்ப்பில், மிக மிக குறைந்த அளவிலான தண்டனை தரப்பட்டது. இது நாட்டு மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதை விட கொடுமையாக தண்டனை விதிக்கப்பட்ட அத்தனை பேரும் உடனடியாக ஜாமீனிலும் வெளியாகி விட்டனர்.
தற்போது உச்சநீதிமன்றம் இன்று பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள (அதாவது 2 ஆண்டு சிறை) அத்தனை பேரும் இந்த காலத்தை முடித்து விட்டு வெளியாகி விடும வாய்ப்பு உருவாகி விட்டது. மேலும் யூனியன் கார்பைடு ஆலையின் தவறால் பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் மேல் நிவாரணம் கிடைக்காத நிலையும் ஏற்பட்டு விட்டது.
போபால் வழக்கில், மகிந்திரா, விஜய் கோகலே, கிஷோர் காம்தார், முகுந்த், செளத்ரி, கே.வி.ஷெட்டி, குரேஷி ஆகியோருக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது நினைவிருக்கலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications