For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாங்கள் கரைபடியாத கைகளுக்கு சொந்தக்காரர்கள்: வைகோ பெருமிதம்

By Siva
Google Oneindia Tamil News

மோட்டுப்பாளையம்: தேர்தலை புறக்கணித்ததன் மூலம் நாங்கள் கரைபடியாதவர்கள் என்று மக்கள் முன்பு நிரூபிக்க முடிந்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மேட்டுப்பாளையத்தில் மதிமுகவின் 18-ம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது,

கடந்த 1993-ம் ஆண்டு துவங்கப்பட்ட மதிமுக பல்வேறு சோதனைகளைக் கடந்து தொண்டர்களின் ஆதரவால் 18-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபையில் நுழைய முடியாவிட்டாலும், இன்று மக்கள் மன்றத்தில் பெரிய அங்கீகாரத்தை மதிமுக பெற்றுள்ளது.

திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்டதால் துவக்கப்பட்ட மதிமுக, கடந்த 17 ஆண்டு கால அரசியல் வாழ்வில் யாருக்கும் எந்த துரோகமும் நினைத்ததில்லை.

கடந்த 30 வருட காலம் உழைத்ததற்கு திமுக கொலைகாரன் பட்டத்தை சுமத்தியது. அதிமுகவோ கூட்டணியிலிருந்தே வெளியேற்றியது.

ஆனால் தேர்தல் புறக்கணிப்பு மூலம், நாங்கள் கரைபடியாதவர்கள் என்று மக்கள் முன்பு நிரூபித்துள்ளோம் என்றார்.

English summary
MDMK chief Vaiko has told that by bycotting TN assembly election theye have proved themselves as clean. DMK accused them as murderers and ADMK drove them out of alliance, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X