அதிமுக, திமுக கூட்டணி அல்லாத புதிய அணி தமிழகத்தில் உருவாக வேண்டும்: கிருஷ்ணசாமி

Posted By:
Subscribe to Oneindia Tamil
Kkrishnasamy
சென்னை: தமிழகத்தில் அதிமுக, திமுக இல்லாத புதிய கூட்டணி உருவாக வேண்டும், என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது, நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள், ஜனநாயகத்தை பிரதிபலிப்பதாக இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிட்டு 11 ஒன்றிய கவுன்சிலர்கள், 4 நகராட்சி கவுன்சிலர்கள், 11 பேரூராட்சி கவுன்சிலர்கள், 60க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர் பதவிகளை கைப்பற்றியுள்ளது.

ஆளுங்கட்சி அறிவித்துள்ள இலவச திட்டங்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் தமிழக மக்கள், அதிமுகவுக்கு வாக்களித்து உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட மற்ற கட்சிகள், உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டிருந்தால், தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்திருக்கும். தமிழகத்தில் அதிமுக, திமுக இல்லாத, புதிய கூட்டணி உருவாக வேண்டும். சேவை மனப்பான்மை உள்ள யாருக்கும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைப்பதில்லை, என்றார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Puthiya Tamizhagam leader Krishnasamy has said that, a new alliance, sparing ADMK and DMK, should be formed in TN. Tamil Nadu people has voted ADMK with the fear, that they lose free schemes, he said.
Please Wait while comments are loading...