For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் 'பாஜக காதலுக்கு' கண் இல்லை-காங்கிரஸ்

By Chakra
Google Oneindia Tamil News

Sri Sri Ravishankar
டெல்லி: ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ள வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், தனது ஆசிரமத்தின் தலைமையக அமைந்துள்ள, பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் ஏன் ஊழல் எதிர்ப்புப் பிரசாரத்தை துவக்கவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

நிருபர்களிடம் அவர் கூறுகையில்,

அன்னா ஹசாரே குழுவினர் தங்களுக்கு கடந்த 6 மாதங்களில், ரூ. 42.55 லட்சம், அடையாளம் தெரியாத நபர்கள் மூலம் நன்கொடையாக கிடைத்ததாகவும், அதை திருப்பிக் கொடுத்து விடப் போவதாகவும் தெரிவித்துள்ளனர். விலாசம் தெரியாதவர்கள் அளித்த நன்கொடையை திருப்பி தரப் போவதாக, நடைமுறைக்கு ஒத்துவராத செயலை இந்த, 'சூப்பர் ஹீரோக்கள்' அறிவித்துள்ளனர்.

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மகராஜ் ஜி ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார். நவம்பர் 7ம் தேதி முதல் உத்தரப் பிரதேசத்திலி்ருந்து அவர் தனது ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை ஆரம்பித்து 'சத்சங்க' பிரச்சாரம் செய்ய உள்ளார்.

ஆனால், பாஜக கட்சி ஆளும் கர்நாடக மாநிலத்தில் தான் ரவிசங்கரின் தலைமையகம் உள்ளது. அந்த மாநிலத்தில், அவர் ஊழல் எதிர்ப்புப் பிரசாரத்தை துவக்காதது என்?. அங்கு தான் ஊழலுக்காக பாஜக முதல்வரே சிறைக்குப் போயுள்ளார். ஆனாலும் அதை ரவிசங்கர் கண்டு கொள்ளாதது ஏன்.

ஒரு வேளை பாஜக மீது அவர் கொண்ட காதல் தான் காரணமோ?. காதலுக்குத் தான் கண் இல்லையே.... என்றார்.

இந் நிலையில் ட்விட்டரில் அவர் எழுதியுள்ள குறிப்பில், ''காங்கிரசுக்கு எதிரான பாஜக-ஆர்எஸ்எஸ்சின் பிளான் A தான் பாபா ராம்தேவ், பிளான் B அன்னா ஹசாரே, பிளான் C ரவிசங்கர்..'' என்று கூறியுள்ளார்.

ஹசாரே அடிக்கடி மிரட்டுவது ஏன்?-மத்திய அரசு:

இதற்கிடையே, லோக்பால் மசோதாவை நிறைவேற்றுவதில் நாங்கள் உறுதியாக உள்ள நிலையிலும் அரசை ஹசாரே குழு தொடர்ந்து மிரட்டுவது ஏன் என்பது புரியவில்லை என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறினார்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில், ஹசாரே அரசை நிர்பந்திக்க தேவையேயில்லை. லோக்பால் மசோதாவை நாங்கள் நிறைவேற்றுவோம். இதற்கான பணி தொடங்கிவிட்டது என்றார்.

English summary
Congress General Secretary Digvijay Singh has hit out again at Team Anna, accusing its members of misusing funds during the anti-graft movement. Responding to a question that the India Against Corruption has put out details of all its expenses on its website, Digvijay Singh said "The details about our (politicians) expenses are available on the Election Commission site (website) so it is nothing new.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X