For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி

By Siva
Google Oneindia Tamil News

பலசூர்: அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்கும் அக்னி 1 ஏவுகணை ஒரிசாவின் வீலர் தீவில் இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

ஒரிசா மாநிலம் சண்டிப்பூர் பாதுகாப்புத் தளப் பகுதியிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள வீலர் தீவு ஏவுதளத்தில் இருந்து அக்னி 1 ஏவுகணை இன்று காலை 9.25 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. இந்த ஏவுகணை அணு ஆயுதங்களைத் தாங்கிச் சென்று 700 கிமீ தொலைவில் உள்ள இலக்கை தாக்கக்கூடிய திறன் வாய்ந்தது.

அக்னி 1 ஏவுகணை 15 மீட்டர் நீளம் கொண்டது. 12 டன் எடை கொண்ட அது 1000 கிலோ எடை கொண்ட ஆயுதங்களை தாங்கிச் செல்லும். அக்னி 1 ஏவுகணை இலக்கை மிகவும் துள்ளியமாகத் தாக்கும் வல்லமை உடையது.

இது ஏற்கனவே இந்திய ராணுவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nuclear capable Agni-I strategic ballistic missile has been successfully test fired today at Wheeler Island at 9.25 am. Agni I has a length of 15 metres, weighs around 12 tonnes can strike strike a target which is some 700 km away.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X