For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்பெக்ட்ரம் கைதுகள்!

Google Oneindia Tamil News

2011ம் ஆண்டை ஊழல் ஆண்டு என்றே கூறி விடலாம். அந்த அளவுக்கு ஏகப்பட்ட ஊழல்கள் இந்த ஆண்டை ஆட்டிப் படைத்தன - இந்தியாவில்.

ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல், ஆதர்ஷ் சொசைட்டி ஊழல் என ஏகப்பட்ட ஊழல் புகார்கள் புற்றீசல் போலக் கிளம்பி படையெடுத்து மத்திய அரசை ஆட���டிப் படைத்தன.

இதில் உச்சகட்ட ஊழல் புகார் ஸ்பெக்ட்ரம் ஊழலாகும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டின் போது நடந்த முறைகேடுகள் காரணமாக நாட்டுக்கு ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டதாக சர்ச்சை கிளம்பியது - சிஏஜி அறிக்கை மூலம்.

இதையடுத்து முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு சிக்கல் ஏற்பட்டது. பெரும் நெருக்கடிக்கு மத்தியில், 2010ம் ஆண்டு ந���ம்பர் மாதம் பதவி விலகினார். இதையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி சிபிஐயால் கைது செய்யப்பட்டார் ராசா. அன்று முதல் இந்த ஆண்டின் இறுதி வரை ஜாமீன் கூட கோராமல் திஹார் சிறையில் அடைபட்டுள்ளார் ராசா.

இந்த வழக்கில் திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் சரத்குமார் ரெட்டி உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ராசா மற்று���் சிலரைத் தவிர மற்றவர்கள் ஆண்டின் இறுதி நாட்களில் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தனர்.

English summary
2g Specturm scam topped the headlines in 2011. The arrest of Raja, DMK MP Kanimozhi and others shocked the DMK in Tami Nadu. After a long battle with courts Kanimozhi came out of the jail but Raja is still longing in the Tihar prison without seeking bail.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X