For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

33 பேரின் உயிரைக் குடித்த 'தானே' புயல்!

By Shankar
Google Oneindia Tamil News

Cyclone Thane
சென்னை: கடந்த மூன்று நாட்களாக தமிழகம் - புதுவையை 'உண்டு இல்லை' என்றாக்கிவிட்ட தானே புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துவிட்டது.

தமிழ்நாட்டில் 26 பேரும், புதுச்சேரியில் 7 பேரும் பலியானார்கள்.

கடலூர் மாவட்டத்தில் மட்டும் 21 பேர் பலியானார்கள். அவர்களில் வீட்டுச்சுவர் இடிந்து 2 குழந்தைகள் உள்பட 8 பேரும், மரம் முறிந்து விழுந்ததில் இருவரும், 11 பேர் கடுங்குளிரினாலும் உயிர் இழந்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை அடுத்த ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த குரூப் நாயுடு (வயது 70) என்பவர் மாட்டுக்கொட்டகையில் மின்சார கம்பி அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பலியானார். அந்த மாவட்டத்தில் கோட்டக்குப்பத்தை சேர்ந்த சுகந்தி (23) என்ற பெண் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது மரம் முறிந்து விழுந்து உயிர் இழந்தார்.

சென்னை சுற்றுலா பயணி

புதுச்சேரியில் 7 பேர் பலியானார்கள். வீடு இடிந்து விழுந்ததில் அருள்ராஜ் (47), சுகந்தி (25) ஆகிய இருவர் உயிர் இழந்தனர். 80 வயது மதிக்கத்தக்க ஒருவரும் புயல்-மழைக்கு பலியானார்.

புதுச்சேரியை அடுத்த தவளக்குப்பத்தில் பிரெஞ்சு குடியுரிமை பெற்ற பாஸ்கல் (47) என்பவர், கார் ஓட்டிச்சென்றபோது மரம் முறிந்து விழுந்ததில் உடல் நசுங்கி இறந்தார். சென்னை எண்ணூரில் இருந்து சுற்றுலா சென்ற மதி (53) என்பவரும் காரில் மரம் முறிந்து விழுந்ததில் பலியானார். பலியான மற்ற இருவருடைய விவரம் தெரியவில்லை.

சென்னையில் பெண் பலி

சென்னை புளியந்தோப்பில் பழமையான கட்டிடத்தின் பால்கனி இடிந்து விழுந்ததில் அந்த வழியாக சென்ற 45 வயது பெண் இடிபாடுகளில் சிக்கி பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடியை அடுத்த பட்டாபிராமில், அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த ஏசுதாஸ் (வயது 70) என்ற ஓய்வு பெற்ற ராணுவ வீரர், மின்சாரம் தாக்கி உயிர் இழந்தார். பூந்தமல்லி அருகே விஸ்வநாதன் (32) என்ற எலக்ட்ரீசியன் மோட்டார் சுவிட்சை போட்டபோது மின்சாரம் பாய்ந்து பலியானார்.

ரூ 2 லட்சம் நிதி

தமிழகத்தில் மட்டும் 26 பேர் பலியானதை உறுதி செய்த முதல்வர் ஜெயலலிதா, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் உதவித் தொகை உடனடியாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

English summary
Cyclone Thane dumped heavy rain and sent wind gusts up to 140 kmph after it hit the Tamil Nadu coast on Friday killing at least 33 persons and left a trail of destruction and threw life out of gear in Cuddalore district and adjacent Union Territory of Puducherry.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X