For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2011ன் அதிசயம் என்.ஆர்.- கட்சி தொடங்கி 3 மாதத்தில் ஆட்சியைப் பிடித்தார்!

Google Oneindia Tamil News

2011ம் ��ண்டின் அதிசயம் என்றால் அது நிச்சயம் என்.ஆர். என தொண்டர்களால் அன்புடன் அழைக்கப்படும் என்.ரங்கசாமிதான். கட்சி தொடங்கி 3 மாதத்திலேயே அமோக வெற்றி பெற்று ஆட்சியையும் பிடித்தார். அதே அளவுக்கு ஏகப்பட்ட குழப்பங்களையும் சந்தித்தும் குழம்பிப் போனார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவரான ரங்கசாமி 2001-06 மற்றும் 2006-08ல் காங்கிரஸ் அரசின் முதல்வராக இருந்தார். பின்னர் 2008-ல் அவருக்கு எதிர���க அமைச்சர்கள் போர்க்கொடி தூக்கியதைத் தொடர்ந்து ரங்கசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கியது காங்கிரஸ் மேலிடம்.

புதுச்சேரியில் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ரங்கசாமி. சர்வ சாதாரணாக புல்லட்டில் வலம் வந்து மக்களைக் கவர்ந்தவர். ரோட்டோர டீக்கடையில் ஜாலியாக டீ சாப்பிட்டபடி பொதுமக்களிடம் பேசக் கூடிய வெகுஜன தலைவர்.

இப்படியாகப்பட்ட ரங���கசாமி, முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் சில காலம் அமைதியாக இருந்து பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அவர், 2011ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார்.

கட்சி தொடங்கிய அவரை கூட்டணியில் சேர்க்க அதிமுக விரும்பியது. என்.ஆரும் அதற்கு உடன்படவே கூட்டணியில் இணைந்தது அதிமுக. இரு கட்சிகளும் இணைந்து போ��்டியிட்டு ஏப்ரல் மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டன. அப்போது மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 20 தொகுதிகளை இக்கூட்டணி வென்று அனைவரையும் அதிசயிக்க வைத்தது.

கட்சி தொடங்கிய 3 மாதத்திலேயே ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு உயர்ந்த ரங்கசாமி அனைவரின் பார்வையிலும் அதிசயப் பொருளாக காட்சி அளித்தார். அவரது கட்சிக்கு மட்டும் 15 இடங்கள் கிடைத்தன.

ஆனால் யாரும் எதிர்பாராத வ��ையில் அதிமுகவை அதிரடியாக உதறிய அவர் தனித்து ஆட்சியமைத்தார். இதனால் அதிமுக கடும் கடுப்பாகி சரமாரியாக அவரை விமர்சித்தது.

ஆட்சியை அமோகமாக பிடித்து விட்டாலும் அமைச்சர்களை நியமிக்க பெரும் திணறலை சந்திக்க நேர்ந்தது ரங்கசாமி. இதனால் முதல்வராகப் பதவியேற்று பல நாட்கள் கழித்துதான் அவரது அமைசசரவை பதவியேற்றது. ஆளாளுக்கு அமைச்சர் பதவி கேட்டு குடுமியைப் பிடித்ததால் இந்த நிலை.

மக்களின் பெரும் ஆதரவுடன் ஆட்சியில் அமர்ந்த ரங்கசாமி, இந்த ஆண்டின் இறுதி வரையிலும் நிம்மதியான முறையில் தனது நாட்களை கழிக்க முடியாத அளவுக்கு அவருக்கு ஏகப்பட்ட சிக்கல்கள், திணறல்கள், நெருக்குதல்கள். வரும் ஆண்டாவது ரங்கசாமிக்கு நல்ல ஆண்டாக அமைய வாழ்த்துவோம்.

English summary
Puducherry leader N Rangasamy launched a new party All Indian NR Congress and faced the assembly polls in 3 months. He joined hands with ADMK and snatched a massive win in the polls and became the CM of the union territory for the third time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X