For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின்னல் வேகத்தில் முடிந்து போன பின்லேடன்!

Google Oneindia Tamil News

உலகையே ஆட்டிப் படைத்த அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனை 10 ஆண்டுகளாக தேடி வந்த அமெரிக்கா, பாகிஸ்தானில் வைத்து அதிரடியாக கதையை முடித்து உலகுக்கு அதைச் சொன்னபோது யாருமே சில நொடிகள் அதை நம்பவில்லை.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகே உள்ள அபோதாபாத்தில் தனது ம��ைவியர் மற்றும் குடும்பத்தினருடன் பதுங்கியிருந்த பின்லேடனை அதிகாலையில் சுற்றி வளைத்த அமெரிக்க கடற்படையின் சீல் பிரிவு கமாண்டோக்கள் மின்னல் வேகத்தி்ல பின்லேடனை வேட்டையாடி உடலையும் தூக்கிக் கொண்டு வெளியேறினர். அதே வேகத்தில் கடலில் புதைக்கப்பட்டார் பின்லேடன்.

என்ன நடந்தது என்பதே புரியாத அளவுக்கு உலகப் பயங்கர தீவிரவாதி பின்லேடனின் கதை முடிந்தது இன்னமும் கூட ஹா���ிவுட் பட ரேஞ்சுக்கு பரபரப்பான விஷயமாகவே இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதி, பாகிஸ்தான் பழங்குடியினப் பகுதி என பல பகுதிகளிலும் பின்லேடன் குறித்து சந்தேகப் பார்வையுடன் தேடுதல் வேட்டை நடத்தி வந்த அமெரிக்காவுக்கு, லேடன் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருக்கிறான் என்பது உறுதியாகத் தெரிய வந்தது. இதையடுத்து வேட்டையை தீவிரமாக்கியபோது இஸ்லாமாபாத்துக்கு அருகே உள்ள ���போதாபாத் பகுதியில் ஒரு பாதுகாப்பான வீட்டுக்குள் லேடன் பதுங்கியிருந்து வாழ்ந்து வருவது உறுதியானது.

இதையடுத்து மே 1ம் தேதி அதிகாலையில் அங்கு வந்த அமெரிக்க கமாண்டோக்கள் சத்தமே போடாமல் வீட்டுக்குள் புகுந்து பின்லேடனை தூக்கி விட்டனர். பாகிஸ்தான் அரசுக்கும், அந்த நாட்டு ராணுவத்துக்கும் கூட அமெரிக்கக் கடற்படையினர் உள்ளே வந்தது, பின்லேடனை கொன்றது என எதுவுமே தெரியாத ���ளவுக்கு அனைத்தும் சடுதியில் நடந்தேறியது.

பின்லேடனை அமெரிக்கப் படையினர் கொன்ற விதம் இந்த ஆண்டின் மிகப் பெரிய அதிரடி ஆக்ஷனாக பார்க்கப்படுகிறது.

English summary
Killing of Osama Bin laden was the top thriller action story of the year. Al Qaeda's chief was eliminated in minutes in a house near Abbottabad in Pakistan by US navy seals on May 1.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X